இணையத்தில் சக்கை போடு போடும் தளபதி மகன் நடித்த குறும்படம் – வீடியோ..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார்.

இந்நிலையில் விஜயின் மகனான சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். ஜங்ஷன் என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்தக் குறும்படத்தில் ஒரு சில விநாடிகள் மட்டுமே திரையில் வருகிறார். இந்தக் குறும்பட டீசரை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இன்று சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடி முடிப்பதற்குள், சர்கார் பட சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது விஜய் மகன் குறித்த செய்தியும் விஜய் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.-Source: tamil.news18

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!