குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் செய்யப் போகும் அதிர்ச்சி செயல்..!


இங்கிலாந்தை சேர்ந்த 22 வயதான ஹைடன் பிறக்கும் போது பெண்ணாக பிறந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஆணாக மாறும் சிகிச்சையை செய்து கொண்டார்.

இதையடுத்து கடந்தாண்டு பேஸ்புக் நண்பர் ஒருவரின் விந்தணுவை தனது கர்ப்பபையில் செலுத்தி கொண்டு அதன் மூலம் கர்ப்பமானார் ஹைடன். பின்னர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து, இங்கிலாந்தில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை ஹைடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவரே தெரிவித்துள்ளார். முதற்கட்ட சிகிச்சை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் £19k செலவிலான இறுதிக்கட்ட அறுவை சிகிச்சையை அடுத ஆண்டு செய்து கொள்ள இருக்கிறார் ஹைடன்.

இது குறித்து ஹைடன் கூறுகையில், எனக்கு கிட்டத்தட்ட முழுமையான வாழ்க்கை அமைந்துள்ளது. அழகான குழந்தைக்கு தந்தையாகியுள்ளேன், இறுதியான அறுவை சிகிச்சை முடிந்துவிட்டால் என்னை நான் முழுவதுமாக உணர்வேன் என கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!