முகத்தில் அதிகளவு பருக்களை ஏற்படுத்தும் 8 உணவுகள் இவைதானாம்..!


பருக்கள் பெண்களிற்கு மட்டுமல்ல ஆண்களிற்கும் உள்ள மிகப் பெரும் சவால். இது பொதுவான சருமப் பிரச்சினையாக இருந்த போதிலும் இதனை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

திடீரென பருக்கள் முகத்தில் தோன்றுவதற்கான காரணங்கள் மன அழுத்தம், ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை மற்றும் சில உணவுப் பழக்கங்கள்.

பருக்களைக் குணப்படுத்துவதற்கு மருந்துகளையும், கிறீமையும் பயன்படுத்தினாலும் அது போதியளவு தீர்வைத் தருவதில்லை. அதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களே.

பருக்களை ஏற்படுத்தும் உணவுகள் எவை என தெரியுமா?

1. பிரட்.
பிரட் சருமத்தின் அண்டிஒக்ஸிடன் அளவைக் குறைப்பதனால் பருக்கள் தோன்றுகின்றன. அத்துடன் பருக்களை ஏற்படுத்தும் குளுட்டன் இதில் காணப்படுகின்றது.


2. சாக்லேட்.
சாக்லேட்டில் அதிகளவான கொழுப்புக்களும் சர்க்கரையும் உள்ளதனால் சீபத்தின் உருவாக்கத்தை அதிகரித்து பருக்களை ஏற்படுத்தும். ஆனால் கறுப்புச் சாக்லேட்டில் அண்டிஒக்ஸிடன் அதிகளவில் இருப்பதனால் அதனை உட்கொள்ளலாம்.

3. சீஸ்.
சீஸில் உள்ள புரோயிஸ்ட்ரோன் கொழுப்பை உருவாக்கும் சுரப்பிகளை தூண்டுவதனால் சருமத்தில் எண்ணெய்த் தன்மை அதிகரித்து ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்கும். இதனால் பருக்கள் தோன்றுகின்றன.

4. உருளைக் கிழங்கு சிப்ஸ்.
எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் துரித உணவுகளில் ஒன்றாகும். இதனை சாப்பிடுவதனால் சருமத்தில் வீக்கமும் பருக்களும் தோன்றுகின்றன.

5. சிவப்பு இறைச்சி.
சிவப்பு இறைச்சி சீபத்தை அதிகளவில் உருவாக்குவதனால் எண்ணெய் தன்மை அதிகரிக்கின்றது. மேலும் இதில் அதிகளவான கொழுப்புக்கள் உள்ளதனால் பருக்கள் தோன்றுகின்றன.


6. பால்.
எல்லா பால் உணவுப் பொருட்களும் உடலிற்கு சிறந்ததல்ல. பால் சாப்பிடுவதனால் அது நேரடியாக ஹார்மோன் அளவை பாதிக்கச் செய்வதனால் பருக்கள் ஏற்படுகின்றன.

7. காபி.
காபி சாப்பிடுவதனால் உடனடியாக சக்தியை உடைக்கிறது, இது சருமத்திற்கு கெடுதல். எனவே தொடர்ச்சியாக காபி சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.

8. கொய்யாக் காய்.
பருக்கள் வருவதற்கான மற்றொரு காரணம் சரியான குடல் செயற்பாடு இல்லாமை. கொய்யாக் காய் ஆரோக்கியமானதாக இருந்தாலும் மலச்சிக்கலை ஏற்படுத்துவதனால் குடலில் நச்சுக்கள் தேங்கி பருக்கள் ஏற்படுகின்றன. – © Tamilvoice.com | All Rights Reserved

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!