மருத்துவர்களால் சக்தி வாய்ந்த பெயின்கில்லர் கண்டுபிடிப்பு.. இதில் என்ன நன்மை..?


அமெரிக்காவில் உள்ள மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் குறைந்து கொண்டே செல்கின்றது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவிளைவுகளைக் கொண்ட பெயின்கில்லருக்கான எல்லையற்ற அடிமைத்தனம். தற்போது மக்களுக்கு அறுதல் அளிக்கும் விதமாக மருத்துவர்களால் ஒரு புதிய வகை பெயின்கில்லர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

AT- 121 எனப்படும் இப்பெயின்கில்லரானது மார்பின் எனப்படும் பெயின் கில்லரிலும் அதிக சக்தி வாய்ந்தது என சொல்லப்படுகிறது. மேலும் இது தீங்கான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக இது மார்பினைப் போன்று போதையினை தோற்றுவிப்பதில்லை.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!