ரஜனி நடிக்கும் 2.0 படத்தின் கதை இதுதானா..?


உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில் படம் நவம்பர் 29- ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

2.0 படத்தின் டீசரில் இருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. தொழில்நுட்ப உலகத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தினம் வந்த வண்ணமாக உள்ளன. தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறிவிடும் அளவிற்கு அதன் வளர்ச்சியானது அபரிமிதமானது. அந்த வகையில் செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.

சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.


மேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற தான் உருவாக்கி சிட்டி ரோபோவை மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும், பறவை வில்லனுக்குமான மோதல் தான் படத்தின் கதையாக இருக்கலாம். இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போன் அடிமையாகி இருக்கின்றனர். அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக தெரிகிறது.

எனினும் அதனை உறுதிப்படுத்த நவம்பர் 29 வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

படத்தில் பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார். படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள். படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படும் என்கிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!