பெண்களின் 5 வகையான பிரச்சனைகளை ஒரே இரவில் தீர்க்கும் பற்பசை வைத்தியம்..!


பற்பசை எல்லோராலும் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கியமானது. இதனைப் பயன்படுத்தி பற்களின் சுத்தத்தையும் ஆரோக்கியத்தையும் பேண முடியும். ஆனால் இந்தப் பற்பசையைப் பயனபடுத்தி சருமம், முடி, உதட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து அதன் அழகைப் பேணுவதற்கு உதவும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அழகிற்கு பற்பசையைப் பயன்படுத்தும் போது வெள்ளை நிறத்தில் உள்ள பற்பசைகளையே தேர்வு செய்ய வேண்டும்.

அழகிற்கு பற்பசையைப் பயன்படுத்துவது எப்படி?

1. கரும்புள்ளிகளை நீக்குவதற்கு.
பற்பசை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை இலகுவாக நீக்க வல்லது.

தேவையானவை:
• ½ தேக்கரண்டி பற்பசை.
• ½ தேக்கரண்டி அரைத்த தக்காளிப் பசை.
• 1 தேக்கரண்டி சமையல் சோடா.

பயன்படுத்தும் முறை:
ஒரு பாத்திரத்தில் பற்பசை, தக்காளி பசை சேர்த்து, அத்துடன் சமையல் சோடாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை பாதிக்கப்பட்ட இடம் அல்லது முகம் முழுவதும் பூசி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். வாரத்திற்கு இரு தடவை இவ்வாறு செய்வதனால் ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள் முற்றாக நீங்கும்.


1.பருக்களை நீக்குவதற்கு.
பற்பசையைப் பயன்படுத்தி ஒரே இரவில் பருக்களை முற்றாக நீக்க முடியும்.

தேவையான பொருட்கள்.
• 2 தேக்கரண்டி பற்பசை.
• 2 தேக்கரண்டி கற்றாளைச் சாறு.

பயன்படுத்தும் முறை:
ஒரு பாத்திரத்தில் பற்பசை மற்றும் கற்றாளைச் சாறும் சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்றாகக் சேரும் வரை கலக்கிக் கொள்ளவும். இதனை முகத்தில் பஞ்சைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் பூசிக் கொள்ளவும். சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும். பருக்கள் நீங்கும் வரை தொடர்ந்து இரவு நேரத்தில் இதனை செய்வது சிறந்தது.


1.முடியின் நுனிப் பகுதிகளிற்கு.
பற்பசையை பயன்படுத்துவதனால் வெடித்து பாதிப்படைந்த முடியின் நுனிப் பகுதிகளிற்கு இலகுவாக தீர்வைப் பெற முடியும்.

தேவையான பொருட்கள்:
• ஒரு மேசைக்கரண்டி பற்பசை.+
• ஒரு மசிக்கப்பட்ட வாழைப்பழம்.

பயன்படுத்தும் முறை:
பற்பசையுடன் மசிக்கப்பட்ட வாழைபழத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கி அடர்த்தியான பசையாகத் தயாரித்துக் கொள்ளவும். அந்தப் பசையை முடியின் நுனிப் பகுதிகளிற்கு தடவி 25 நிமிடங்களின் பின்பு சாதாரண சம்போ பயன்படுத்தி கழுவினால் இலகுவாக முடியின் ஆரோக்கியத்தை மீளப் பெற முடியும்.


1.உதட்டின் சிகப்பழகிற்கு.
உதட்டின் நிறத்திட்டுக்களை நீக்கி மென்மையான சிவப்பு உதட்டினைப் பெறுவதற்கு பற்பசை உதவுகின்றது.

தேவையான பொருட்கள்:
• ஒரு தேக்கரண்டி பற்பசை.
• ஒரு தேக்கரண்டி தேன்.

பயன்படுத்தும் முறை:
பற்பசையையும் தேனையையும் சேர்த்து கட்டிகள் இன்றி நன்றாகக் கலக்கி எடுத்துக் கொள்ளவும். அந்தக் கலவையை உதட்டினை சுத்தப்படுத்திய பின் பூசவும். மாதத்திற்கு ஒரு தடவை இதனைச் செய்வதனால் உதடு மென்மையானதாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும் பெற முடியும்.


1.தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு.
பெண்கள் முகங் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தேவையற்ற முடிகளை நீக்குவதே. இரசாயணப் பொருட்களை பயன்படுத்தி முடிகளை நீக்குவதற்கு பதிலாக பற்பசைகளைப் பயன்படுத்தி இலகுவான முறையில் முடிகலை நீக்க முடியும்.

தேவையானப் பொருட்கள்:
• ஒரு தேக்கரண்டி பற்பசை.
• இரண்டு தேக்கரண்டி கடலை மாவு.
• 4-5 தேக்கரண்டி பால்.

பயன்படுத்தும் முறை:
மேற்குறித்த சேர்மானங்களை சேர்த்து கலவையைத் தயாரித்துக் கொள்ளவும். அதனை உடல் பகுதிகளில் விரலால் தடவி. 25 நிமிடங்களின் பின் முடி வளர்வதற்கு எதிரான திசையில் பஞ்சினைப் பயன்படுத்தி தேய்க்கவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்து வருவது சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!