ஒரு ஆப்பிள் போதும்.. முகம் பளபளவென ஜொலிக்க…! இப்படி செய்தாலே போதும்..!


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் வைத்தியரிடம் செல்லத் தேவையில்லை என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அவர்கள் இவ்வாறு கூறியதற்கான காரணம் உடலிற்கு தேவையான கனியுப்புக்கள் மாற்றும் விட்டமின்கள் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும், சமிபாட்டையும் அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதனாலே.

ஆப்பிளின் சிறப்புக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது உங்களுக்கு தெரிந்தாலும் அவை சருமத்தின் அழகிற்கும் பல விதத்தில் பயன்படும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

இதில் உள்ள விட்டமின் சி கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்வதனால் சருமத்தை மிருதுவாக்க உதவுவதுடன், சூரிய கதிர்களில் இருந்து வரும் UV கதிர்களிடம் இருந்து பாதுகாக்க செம்புச் சத்தும் உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ புற்றுநோய் கலங்களில் இருந்து உடலைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது.

ஆப்பிளை சருமத்தின் அழகிற்கு எப்படி பயன்படுத்துவது?

1. பளிச்சிடும் சருமத்திற்கு
ஆப்பிளில் உள்ள விட்டமின் ஏ சருமத்தைப் புத்துணர்ச்சி பெறச் செய்வதுடன் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. மேலும் அழுத்தத்தைக் குறைப்பதுடன் சருமத்தின் சோர்வு நிலையையும் போக்குகிறது.

தேவையானவை:
• ஒரு ஆப்பிள்.
• ஒரு கப் நீர்.


பயன்படுத்தும் முறை:
ஒரு ஆப்பிளை தோல்களை நீக்காமல் சிறு துண்டுகளாக வெட்டி நீருடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்பு நீரினால் கழுவவும். வாரத்திற்கு ஒரு தடவை இதனைச் செய்வது சிறப்பானது.

2. பொலிவான சருமத்திற்கு
இதில் உள்ள அண்டிஒக்ஸிடன் இயற்கையான சருமப் பொலிவை தக்க வைத்திருக்க உதவுவதுடன் டானிக் அமிலம் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.

தேவையானவை:
• ஆப்பிள் தோல்.
• ஒரு தேக்கரண்டி தேன்.

பயன்படுத்தும் முறை:
ஆப்பிள் தோலை சீவி எடுத்து அதனை நீருடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி தேனைச் சேர்த்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்பு நீரினால் கழுவினால் சிறந்த பலன் கிடைக்கும்.


3. பருக்களைக் குணப்படுத்துவதற்கு.
இதில் உள்ள சாலிசைக்கிலிக் அமிலம் பருக்களைக் குணப்படுத்துவதுடன் அதன் வடுக்களையும், கரும்புள்ளிகளையும் நீக்கும்.

தேவையானவை:
• ஒரு ஆப்பிள்.
• ஒரு தேக்கரண்டி தேன்.
• ஒரு எலுமிச்சப்பழச் சாறு.

பயன்படுத்து முறை:
ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டி அரத்து சாறாக எடுத்துக் கொள்ளவும். அதில் தேனும், எலுமிச்சப்பழச் சாறும் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசவும். 20 நிமிடங்களின் பின்பு குளிர்ந்த நீரினால் கழுவுவது சிறந்தது.

4. உலர்ந்த சருமத்திற்கு.
இவை சருமத்தை ஈரலிப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.


தேவையானவை:
•½ ஆப்பிள்.
•ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் உணவு.
•ஒரு தேக்கரண்டி தேன்.
•ஒரு முட்டைக் கரு.

பயன்படுத்து முறை:
ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டவும். ஓட்ஸை பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் தேனையும் முட்டைக் கருவௌயும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின்பு குளிர்ந்த நீரினால் கழுவவும். சிறந்த பலனிற்கு வாரத்திற்கு இரு தடவைகள் இதனைச் செய்வது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!