நீளமான தலைமுடி வேண்டுமா..? வாரத்திற்கு 2 முறை உப்பை இப்படி யூஸ் பண்ணுங்க..!


உப்பு என்றாலேயே நாம் சமையலுக்கு உபயோகிக்கும் பொருள் என்பது தான் நினைவுக்கு வரும். ஆனால், சமையலை போலவே கூந்தலை பராமரிப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

01. இரண்டு அல்லது மூன்று மேசைக் கரண்டி உப்பினை நீங்கள் உபயோகிக்கும் ஷhம்பூவில் கலந்து அதில் உங்கள் தலை முடியைக் கழுவுவதன் மூலம் எண்ணெய்த் தன்மை குறைவடையும்.

02. தலையில் நேராக வகுடெடுத்து 1 அல்லது 2 மேசைக் கரண்டி உப்பினை தலை ஓட்டில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் போது உங்கள் கை விரல்கள் ஈரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தலையை நன்றாகக் கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.


03. தலையைக் கழுவி விட்டு கடல் உப்பை உபயோகித்து 10 – 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் தலையை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து 2 மாதங்களுக்கு செய்து வந்தால் தலை முடி வளரும்.

கூந்தல் பராமரிப்புக்கென்று உப்பை உபயோகிக்கும் போது, குறித்த உப்பு எந்த வகையைச் சேர்ந்தது எனக் கருத்திற் கொள்ள வேண்டும். எல்லா வகை உப்பிலும் சோடியம் குளோரைட் உள்ளது. உப்புக்கள் பொதுவாக நான்கு வகைப்படும்.

01. கல் உப்பு
02. பிரித்தெடுக்கப்பட்ட உப்பு
03. கடலுப்பு
04. இந்துப்பு

கூந்தலைப் பராமரிக்கவென நாம் எப்போதும் கடலுப்பையே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!