முகத்திலுள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள் நீங்க வாரத்திற்கு 2 தடவை இப்படி செய்யுங்க


ஒவ்வொருவரும் தினமும் பல சருமப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைகளால் உடலில் ஆரோக்கியத்தைப் பாரியளவில் பாதிக்கும் அச்சுறுத்தலும் அதிகம் உள்ளது. சருமத்தில் சொறி, சிரங்கு, உலர்வடைதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானதே.

தினமும் தேனைப் பயன்படுத்துவதனால் சருமத்தை பாதுகாப்பதுடன் அதன் அழகையும் மெருகூட்டுகிறது. அத்துடன் சருமப் பிரச்சினைகளில் இருந்தும் இலகுவாக தீர்வைத் தருகிறது.
இதே போன்றே எலுமிச்சப்பழச் சாறும் இறந்த கலங்களை நீக்குதல், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருத்தல், வீக்கத்தைக் குறைத்தல் போன்ற பல நன்மைகளைச் செய்கிறது.

எலுமிச்சப் பழச் சாற்றையும் தேனையும் சேர்த்துப் பயன்படுத்துவதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

1.ஈரலிப்பாக இருத்தல்.
சருமம் மிருதுவாக இருப்பதற்கு ஈரலிப்பாக இருப்பது மிக அவசியமானது. எலுமிச்சப் பழமும் தேனும் சிறந்த ஈரலிப்பதத்தை சருமத்திற்கு தருகிறது.

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாறும் ஒரு தேக்கரண்டி தேனும் சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன் சருமத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். 30 நிமிடங்களின் பின்பு நீரினால் கழுவவும்.

2.இறந்த கலங்களை நீக்குதல்.
இறந்த கலங்கள் சருமத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது. இதனை அகற்றுவதற்கு எலுமிச்சப்பழத்தையும் தேனையும் வாரத்திற்கு இரு தடவை பயன்படுத்துவதனால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

3.கரும்புள்ளிகளை நீக்கும்.
கரும்புள்ளிகளை நீக்கி பளிச்சிடும் சருமத்தைப் பெறுவதற்கு ஒரு மேசைக்கரண்டி ஓட்ஸ் உணவுடன் ஒரு தேக்கரண்டி தேனும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாறும் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அந்தப் பசையை கரும்புள்ளிகளின் மீது தடவி 20 நிமிடங்களின் பின்பு நீரினால் கழுவவும். வாரத்திற்கு இரண்டு தடவை செய்வது சிறப்பானது.

4.பருக்களை குணப்படுத்தும்.
பருக்கள் அதனால் ஏற்படும் கடி, வடுக்களிற்கு தேனையும் எலுமிச்சப் பழச்சாறையும் தொடர்ச்சியாக பயன்படுத்தல் சிறந்தது. எலுமிச்சப் பழச்சாறையும் தேனையும் சம அளவாக எடுத்து கலந்து கொள்ளவும். அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடங்களின் பின்பு நீரினால் கழுவினால் தீர்வு கிடைக்கும்.

5.பளிச்சிடும் சருமத்தைப் பெற முடியும்.
சருமத்தின் பழுப்பு நிறத்தினை நீக்கி பளிச்சிடும் சருமத்தைப் பெறுவதற்கு தேனிலும், எலுமிச்சப்பழச் சாற்றிலும் உள்ள அன்டிஒக்ஸிடன் உதவுகிறது.


தேவையானவை:
•ஒரு தேக்கரண்டி கடலை மாவு.
•இரண்டு தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாறு.
•ஒரு தேக்கரண்டி தேன்.
•சிறிதளவு மஞ்சள் பவுடர்.

பயன்படுத்தும் முறை:
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின்பு நீரினால் கழுவவும்.

6.உதட்டின் அழகை அதிகரிக்கும்.
எலுமிச்சப்பழச் சாற்றில் உள்ள சிட்டிக் அமிலம் உதட்டின் நிறத் திட்டுக்களை நீக்குவதுடன் தேன் ஈரலிப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதற்காக சில துளி தேனும். ஒரு துளி எலுமிச்சப்பழச் சாறும் சேர்த்து உதட்டில் தடவி ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஈரமான துணியால் துடைப்பது சிறந்தது.

7.தோல் சுருக்கங்களை அகற்றும்.
ஒரு தேக்கரண்டி அரிசி மாவையும் ஒரு தேக்கரண்டி தேனையும் 2 தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாறையும் சேர்த்து, அந்தக் கலவையை முகத்தில் தடவி அது காய்ந்த பின்பு நீரினால் கழுவுவதனால் தோல் சுருக்கங்களை நீக்க முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!