கருகருவென அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு பீரை பயன்படுத்த முடியும் என்றால் நம்புவீர்களா?


அடர்த்தியான முடியைப் பெறுவதற்கு பீரைப் பயன்படுத்துங்கள் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? ஆனால் அது தான் உண்மை. இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி கிடைக்காத தீர்வு பீரினால் உங்களிற்கு கிடைக்கும்.

பீர் மதுபானம் என்றதைத் தாண்டி அதில் உள்ள புரோட்டின் உடைந்த முடிகளைச் சரி செய்வதுடன் அதன் கட்டமைப்பையும் மீளளித்து அடர்த்தியான முடி கிடைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் பி முடி வளர்ச்சிக்கும், மாள்டோஸ் முடியின் வலிமைக்கும் கை கொடுக்கிறது.

முடிக்குத் தேவையான பயோட்டின் இருப்பதனால் பொடுகை நீக்குவதுடன், முடி உதிர்வையும் தடுக்கும்.

அதுசரி பீரை முடிக்கு எப்படி பயன்படுத்துவது?

1. பீரும் முட்டையும்.
தேவையான பொருட்கள்:
½ கப் பீர்.
ஒரு முட்டை.
ஒரு தேக்கரண்டி அவகோடா எண்ணெய்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பீர் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி அவகோடா எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையை முடியின் வேரில் இருந்து நுனி வரை தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களிற்கு குளிக்கும் தொப்பியால் மூடி வைக்கவும். பின்பு பொதுவாக பயன்படுத்தும் சம்போ, கண்டிஸ்னர் பயனபடுத்தி குளிக்கவும். வாரத்திற்கு ஒரு தடவை இதை செய்வது சிறந்தது.


2. பீரும் தேனும்.
தேவையானவை:
½ கப் பீர்
ஒரு தேக்கரண்டி தேன்.
ஒரு முட்டை மஞ்சள் கரு
ஒரு வாழைப்பழம்.

செய்முறை:
மேற்குறிப்பிட்டவற்றை சேர்த்து அடர்த்தியான பசையாக அரத்து எடுத்துக் கொள்ளவும். அதனை முடியின் வேரில் இருந்து நுனி வரை பூசி மசாஜ் செய்யவும். குறைந்தது 2 மணி நேரத்திற்காவது குளிக்கும் தொப்பியால் மூடி கட்டவும். பின்பு எப்போதும் பயன்படுத்தும் சம்போ, கண்டிஸ்னர் பயன்படுத்தி குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு தடவை குளிக்கலாம்.


3. பீரும் ஆப்பிள் சிடர் விநாகிரியும்.
தேவையானவை:
¼ கப் ஆப்பிள் விடர் விநாகிரி.
ஒரு கப் பீர்.
செய்முறை:
சில மணி நேரங்களிற்கு அல்லது இரவு முழௌவதும் பீரை வெளியே வைத்து நுரைகள் நீங்கிய பின்பு, ¼ கப் ஆப்பிள் சிடர் விநாகிரியுடன் சேர்க்கவும். எப்போதும் பயன்படுத்தும் சம்போ, கண்டிஸ்னர் பயன்படுத்தி குளிக்கவும். பின்னர் இந்தக் கலவையை முடியில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறிய பின்பு நீரினால் கழுவவும்.


4. பீர் சம்போ
தேவையானவை:
½ கப் பீர்.
1 கப் சம்போ.
பயன்படுத்தும் முறை:
பீரைக் கொதிக்க வைத்து ஒரு பானையில் 15 நிமிடங்களிற்கு ஆற விடவும். ஆறிய பின்பு அதில் சம்போவைக் கலந்து பீர் சம்போவை தயாரிக்கவும். நீங்கள் குளிக்கும் போது இந்த சம்போவைப் பயனபடுத்துவது சிறந்தது.

5.பீர் மற்றும் ஸ்ட்ரோபரிக் கலவை:
தேவையானவை:
1 கப் பீர்
3-4 ஸ்ட்ரோபரி
செய்முறை:
ஸ்ட்ரோபரியை நசுக்கி அதில் ஒரு கப் பீரைச் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். இந்தப் பசையால் தலையில் மசாஜ் செய்து 20 நிமிடங்களின் பின்னர் சம்போ பயன்படுத்திக் குளிக்கவும். வாரத்திற்கு ஒரு தடவை இந்த முறையைப் பின்பற்றலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!