பிக்பாஸ் வீட்டில் இதுவே முதல் முறை – கமலை உருக வைத்த ரித்விகா…!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மன நிலையில் காணப்படுவது அனைவரும் அறிந்ததே.

மகத் ,மும்தாஜ் , ஐஸ்வர்யா ,டேனியல், பாலாஜி என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் கோபத்தில் சக போட்டியாளர்களை குறை சொல்வதை கண்டிருப்போம். அந்தவகையில இப்போது் ரித்விகா மீதும் குறை சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். ஆனால் அவரை பொறுத்தவரை தான் போட்டியில் பங்கேற்க வந்திருக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இந்த வார இறுதியில் கமல் ஹாசனுடன் பேசினார். அப்போது தான் இதுவரை தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுததில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் அப்படி அழுதது பிக்பாஸ் வீட்டில் தான் என கூறினார். ரித்விகா அழுததை பலரும் அப்போது தான் பார்த்திருப்பார்கள்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!