முகத்தில் அசிங்கமான கரும்புள்ளியா..? இதோ அருமையான வீட்டு மருத்துவம்…!


முக அழகு எனும் போது அதற்கு பங்கம் விளைவிக்கும் காரணிகளில் கரும்புள்ளிகளும் ஒன்றாகும். இவை முகத்தில் கறுப்பு நிறத்தில் நிறைந்திருப்பதோடு பார்ப்பதற்கும் அசிங்கமாகத் தோன்றும்.

இந்த கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அகற்ற முடியும். அது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. 1 முட்டை வெள்ளைக் கரு
02. 1 தேக்கரண்டி எலுமிச்சம் சாறு

செய்முறை
முட்டை வெள்ளைக் கருவை எடுத்து அதனை நுரைக்கும் வரை நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாறை கலந்து கொள்ளவும். அதன் பின்னர் இந்தக் கலவையை நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.


வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை முதலில் கழுவிக் கொள்ளவும். அதன் பின்னர் மேற் குறித்த கலவையை முகம் முழுவதும் நன்றாக பூசிக் கொள்ள வேண்டும். 20 – 25 நிமிடங்கள் கழித்து அந்த மாஸ்க்கை அகற்ற வேண்டும். இதன் போது கரும்புள்ளிகள் அனைத்தும் அகன்று விடும். இறுதியாக முகத்திற்கு பூசும் கிறீம் ஒன்றை பூச வேண்டும்.

எலுமிச்சம் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம், துளைகளை மூடுவதோடு சருமத்தில் ஆழமாக ஊடுருவிச் சென்று பக்டீரியாவிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

அதே போல், முட்டை வெள்ளைக் கருவில் உள்ள செலனியம் பருக்கள் உருவாவதை தடுப்பதோடு பக்டீரியாக்களுக்கு எதிராகவும் தாக்கம் புரியும் வல்லமை கொண்டது.
பிறகென்ன? இந்த மாஸ்க்கை வீட்டிலேயே தயாரித்து கரும்புள்ளிகளை விரட்டுங்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!