மார்பகத்தில் வலி வந்தால் இதன் அறிகுறியாக கூட இருக்கலாம்… வீட்டிலே குணப்படுத்துவது எப்படி?


பெண்களிற்கு சில நேரங்களில் மார்பகத்தில் கூர்மையான வலி ஏற்படுகிறது அதனை மாஸ்ரல்ஜியா(mastalgia) என்கின்றனர். மாதவிடாயின் போது பலருக்கு வலி ஏற்படுவது பொதுவானதே. அது மட்டுமல்லாமல் மார்பகத்தில் வலி ஏற்படுவதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. அவை:

• நீர்க் கட்டிகள் உருவாதல்.
• ஹார்மோன்களின் சமநிலை.
• தாய்ப் பால் ஊட்டுதல்.
• சிறு வயதில் பூப்பெய்தல்.
• கர்ப்ப காலம்.
• மாதவிடாயின் போது.
• மர்பக சத்திர சிகிச்சைகள்.
• இறுக்கமாக ஆடைகளை அணிதல்.

மார்பக வலியை இரண்டு விதமாகக் கூறுவார்கள். அவை சுழற்சி முறையான வலி, சுழற்சியற்ற மார்பக வலி. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பாக அல்லது பின்னர் ஏற்படும் வலியை சுழற்சி முறையான மார்பக வலி எனவும். வலி, காயம், கட்டிகள் ஏற்படும் போது உருவாகும் வலியை சுழற்சியற்ற மார்பக வலி எனவும் கூறுகின்றனர்.

மார்பகத்தில் வலி ஏற்பட்டால் குணப்படுத்துவது எப்படி?

1. மசாஜ்.
2 தேக்கரண்டி சூடாக்கப்பட்ட ஒலிவ் எண்ணெய்யை எடுத்து தினமும் இரு தடவைகள் மார்பகத்தில் மசாஜ் செய்வதனால் வீக்கம் குறைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வலி குறைவடையும்.

2. ஆமணக்கு எண்ணெய்.
ஆமணக்கு எணெய்யில் ரிஸினோலிக் அமிலம் இருப்பதனால் வலியையும், வீக்கத்தையும் இலகுவாக குறைத்து விடும். தினமும் ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யுடன் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்வதனால் மார்பகத்தில் ஏற்படும் வலிக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

3. சாஸ்ட்பெரி.
சாஸ்ட்பெரி மார்பக வலியை நீக்குவதற்கான சிறந்த மூலிகை. இதன் சாற்றை 40 துளிகள் வரை எடுத்து ஒரு கோப்பை நீரில் கலந்து காலையில் குடிப்பதனால் மார்பக வலி குறைவடையும்.

4. ஈவினிங் பிறிம்றோஸ் எண்ணெய்.
ஈவினிங் பிறிம் றோஸ் எண்ணெய் மார்பக வலிக்கு சிறந்த நிவாரணியாக இருப்பதனால் இதில் சில துளிகள் எடுத்து மார்பகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்வதனால் வலி குறைவடையும்.

5. பெருஞ்சீரகம்.
பெருஞ்சீரகம் மார்பக வலியைக் குணப்படுத்துவதுடன், பெண்களிற்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, நீர்த் தேக்கத்தையும் குறைக்கிறது.
ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை எடுத்து ஒரு கப் நீரில் கலந்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அந்த சாயத்தை தேநீராக பருகினால் சிறந்தது.


6. ஆப்பிள் சிடர் விநாகிரி.
ஆப்பிள் சிடர் விநாகிரி ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் வலியைக் குறைக்கும்.
ஒரு கோப்பை சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் விநாகிரியை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து தினமும் இரண்டு தடவைகள் குடிப்பது சிறந்தது.

7. விட்டமின் ஈ.
விட்டமின் ஈ மார்பக வலியைக் குறைக்கும் ஹார்மோன்களை சீராக்கும். இது சூரியகாந்தி, பாதாம், அவகோடா, கீரை, ஒலிவ், பீற்றூட் போன்றவற்றில் அதிகம் செறிந்துள்ளது.

8. மக்னீசியம்.
மக்னீசியம் மார்பக வலி, மாதவிடாயின் போது மர்பகம் மெனை அடைதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து சிறந்த தீர்வைத் தருகிறது. இது கடும் பச்சை இலை வகைகள், கடலை, விதைகள், அவகோடா, வாழப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

9. ஜஸ்கட்டி.
ஜஸ்கட்டி சிறந்த வலி நிவாரணியாக செயற்படுவதனால், ஒரு துவாயில் சில ஜஸ்கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுப்பதனால் தீர்வைப் பெற முடியும்.

10. டாண்டெலியன்.
இதில் அதிக பொட்டாசியம் இருப்பதனால் இலகுவாக மார்பகப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும்.

காய்ந்த டாண்டெலியன் வேரை ஒரு கப் நீரில் கலந்து 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த சாற்றுடன் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடிப்பது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights
Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!