சொந்த தங்கையை மது குடிக்க வைத்து அண்ணன் செய்த கேவலமான செயல்..!


ஹரியானாவில் சொந்த தங்கையை மது குடிக்க வைத்து அண்ணன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் கார்டர்புரி என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவன் தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தனது தங்கையை மது குடிக்க வற்புறுத்தியுள்ளான்.

அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, விடாத அந்த கொடூரன் வற்புறுத்தி தங்கையை மது குடிக்க வைத்துள்ளான். பின் தங்கை என்றும் பாராமல் சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்துள்ளான்.

இதனால் சிறுமி பயத்தில் அலறியுள்ளார், பயந்து போன அந்த அயோக்கியன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான். வீட்டிற்கு வந்த அந்த சிறுமியின் தாயிடம் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறி கதறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் தன் மகன் செய்த கீழ்த்தரமான செயலை காவல் துறையினருக்கு தெரிவித்தார். போலீஸார் தலைமறைவாக இருந்த அந்த அயோக்கியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!