பெண்களே முன்னழகை சிக்கென்று அழகாக வைத்திருக்க வேண்டுமா..? ஆபாசம் அல்ல…!


பெண்களுக்கு தங்களை அழகாக வைத்திருப்பதில் அதிக நாட்டம் உண்டு. முகமாயினும் சரி, உடலாயினும் சரி அதிக ஈடுபாடு உண்டு. பலர் முகத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உடலுக்கு வழங்குவதில்லை. இருப்பினும் ஒரு சிலர் முகத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போலவே உடம்பிற்கும் முக்கியத்துவம் அளிப்பதுண்டு.

பெண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, முகத்தில் சுருக்கம் ஏற்படுவதைப் போலவே அவர்களின் முன்னழகிலும் அழகு குறைய ஆரம்பிக்கும். வயது அதிகரிப்பதால் மார்பகங்கள் தொய்ய ஆரம்பிக்கும்.

இருப்பினும் உடற்பயிற்சி, உணவு முறை மற்றும் பராமரிப்பு என்பவற்றின் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். இதே போல் போதியளவு தண்ணீர் பருகுதல், மாதுளம் எண்ணெய் அல்லது கற்றாளை ஆகியவற்றைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தல் மற்றும் சரியான உடல் நிறையைப் பேணுதல் ஆகியவற்றின் மூலம் முன்னழகை தக்க வைத்துக் கொள்ள முடியும். அது எவ்வாறு என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. உடற்பயிற்சி
1. புஷ; – அப் : முகம் கீழ் நோக்கிப் பார்க்குமாறு தரையில் படுத்து, கைகளை உபயோகித்து மேலே எழும்ப வேண்டும். இவ்வாறு செய்யும் போது மூச்சை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். பின்னர் மீண்டும் உடம்பை கீழே கொண்டு வர வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும் போது உடம்பு நேராக இருக்க வேண்டும்.

11. செஸ்ட்பிரெஸ் : இரண்டு கைகளிலும் டம்பெல்களை வைத்துக் கொண்டு நேராக படுக்க வேண்டும். பின்னர் கைகளை நேராக மேலே உயர்த்த வேண்டும். இதன் போது இரண்டு கைகளும் தோல்களுக்கு மேலாக இருக்க வேண்டும். பின்னர் மீண்டும் கைகளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

111. ஆர்ம்ரெய்ஸ் : கால்களை அகட்டி நேராக நின்று கொண்டு மேலே கைகளை உயர்த்தி பின்னர் தாழ்த்த வேண்டும்.

02. பிரெஸ்ட்மாஸ்க்


தேவையான பொருட்கள்
1. ஒரு முட்டை
2. ஒரு தேக்கரண்டி விட்டமின் ஈ எண்ணெய்
3. ஒரு தேக்கரண்டி யோகட்

செய்முறை
மேற்குறித்த அனைத்தையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். பின்னர் இந்தக் கலவையை மார்பகங்களில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

03. மசாஜ்
ஐஸ்கட்டி, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை உபயோகித்து மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும். வாரமொன்றிற்கு 2 அல்லது 3 தடவை இவ்வாறு செய்வது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!