முகத்தில் வளரும் உரோமங்களை இந்த பொருட்களை வைத்தே காணாமல் போகச் செய்யலாம்..!


முகத்தில் அதிகளவு உரோமம் வளர்வதென்பது பெண்களால் எதிர் கொள்ளப்படும் பாரிய சவாலாகவே உள்ளது. எவ்வளவு தான் முகத்தில் உள்ள உரோமங்களை வெக்ஸிங் செய்தாலும் திரும்பத் திரும்ப உரோமம் வளரத் தான் செய்கின்றது.

பொதுவாக பெண்களின் முகத்தில் அதிகளவு உரோமம் வளர்வதற்கு ஹோர்மோன்களே காரணமாக அமைகின்றன. ஆண்களில் சுரக்கும் டெஸ்டொஸ்டிரோன், சில பெண்களுக்கு அதிகளவில் சுரக்கும் போது இந்த அபரிமிதமான உரோம வளர்ச்சி ஏற்படுகின்றது.

இந்த உரோமங்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எவ்வாறு நிரந்தரமாக அகற்றுவது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. 2 மேசைக் கரண்டி தேன்
02. 1 மேசைக் கரண்டி ஓட்ஸ்
03. 2 தேக் கரண்டி எலுமிச்சம் சாறு


செய்முறை
அரைத் தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் 6 – 8 துளிகள் எலுமிச்சம் சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்கு கலந்து பசை போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மீதமுள்ள எலுமிச்சைச் சாறு மற்றும் தேனை நாங்கள் ஏற்கனவே தயாரித்த பசையுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பசையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் சுட்டாறிய தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். பின்னர் முகத்துக்கு உகந்த கிறீம் ஒன்றை பூச வேண்டும். வாரம் ஒன்றிற்கு 2 – 3 தடவைகள் இதைப் போன்று செய்ய வேண்டும். ஒரு மாதத்திலேயே உரோம வளர்ச்சி தடைபடும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!