கருப்பின சிறுவனைக் கொன்ற வழக்கில் முன்னாள் போலீஸ்காரருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை..!


அமெரிக்காவில் கருப்பின சிறுவனைக் கொன்ற வழக்கில் முன்னாள் போலீஸ்காரருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே உள்ள ஹிஸ்பேனிக் நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மதுவிருந்தில் பங்கேற்றிருப்பதாக காவல்துறைக்கு தககல் கிடைத்தது. கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதிக்குச் சென்ற போலீசார், விருந்து நடந்ததாக கூறப்படும் வீட்டை நெருங்கினர்.

அப்போது சிறுவர்கள் சிலர் ஒரு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றுள்ளனர். கார் நிற்காமல் சென்றதால், போலீஸ்காரர் ராய் ஆலிவர், காருக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் எர்வர்ட்ஸ் என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க போலீசாரின் இனவெறியை இந்த சம்பவம் காட்டுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக போலீஸ்காரர் ஆலிவர் (வயது 38) கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. பணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இவ்வழக்கில் வாதப்பிரதிவாதங்கள், சாட்சியங்களிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில், ஆலிவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். இதையடுத்து ஆலிவர் சிறையில் அடைக்கப்பட்டார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!