பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் படியில் அட்டகாசம்… அதிர்ச்சியில் மக்கள்..!


பேனா பிடித்த கையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அரசுப் பேருந்தில் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்தனர்.

சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் மனதில் வன்முறை சம்பவங்கள் புகுந்து இருப்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

கல்லூரி மாணவர்கள் குரூப்பாக சுற்றுகிறார்கள் ஒருவருக்கொருவர் நான் தான் பெரியவன். நான் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிற மாணவர்களை அணுகும்போது மோதல் போக்கு ஏற்படுகிறது. ஒரு குரூப் மற்றொரு குரூப்பை தாக்குகிறது.

மாணவர்கள் தாங்கள் பயணம் செய்யும் பஸ்சிலும் இது போல் குரூப் குரூப்பாக செயல்படுகிறார்கள். மாணவர்களுக்குள் நடக்கும் மோதலில் சில மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் வந்து பயணிகளையும் பயம் கொள்ள செய்கிறார்கள். சமீபத்தில் இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கல்லூரிகளும் இத்தகைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இருந்தாலும் மாணவர்கள் சேட்டை அடங்கவில்லை. இன்றும் அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்த்னர். இதை பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!