வேற்றுக்கிரகவாசிகளுக்கு செய்தி அனுப்பிய விஞ்ஞானிகள்! எப்போது பதில் வரும் தெரியுமா..?


ஏலியன்களுடன் தொடர்புகொள்ள விண்வெளி விஞ்ஞானிகள் 12 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் நட்சத்திர தொகுப்பிற்கு செய்தி அனுப்பி உள்ளனர்.

விண்வெளி விஞ்ஞானிகளின் முதன்மையான ஆராய்ச்சியாக இன்றளவும் திகழ்வது வேற்றுகிரகவாசிகள் என்றழைக்கப்படும் ஏலியன்கள். இந்த பிரபஞ்சத்தில் நாம் மனித இனத்தைத் தவிர வேறு ஏதேனும் உயிர்கள் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நார்வே விண்வெளி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறப்பு ஆன்டெனா மூலம் 12 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள ஜிஜே 273 என்ற வடக்கு நட்சத்திரத் தொகுப்பிற்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான தண்ணீர் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்தில் ஏலியன்கள் வாழ்கிறார்களா’ என்று அறிவதற்கு இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு செய்தியை ஒருவேளை ஏலியன்கள் கேட்டு, பதில் திரும்பி வர சுமார் 25 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!