காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்..!


திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறினார்.

தி.மு.க. பொதுக்குழுவில் மு.க ஸ்டாலின் தி.மு.க தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட பின் முதல் முறையாக பேசிய மு.க . ஸ்டாலின் என் உயிரினும் மேலான என கருணாநிதி பாணியில் உரையை தொடங்கினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

கருணாநிதி போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது. நான் கருணாநிதி இல்லை; அவர் போல் பேசத் தெரியாது; பேசவும் முடியாது. எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன் . திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை.

கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.கருணாநிதி இல்லாத அறிவாலயத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

“அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு கடினமானது… பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது…

நீங்கள் பார்த்த ஸ்டாலின் வேறு… மு.க. ஸ்டாலினாகிய நான் இன்று புதிதாக பிறந்துள்ளேன்.

இன்று நான் புதிதாய் பிறந்தேன், நீங்கள் பார்க்கும்… கேட்கும் ஸ்டாலின் வேறொருவன். திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். தமிழக மக்களின் நலனுக்காக உழைப்பேன். எனது பெரியப்பா பேராசிரியர் அன்பழகன், பெரியப்பாவிடம் நல்ல பெயர் பெறுவது 200 மடங்கு சமம்.

இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!