தேங்காய் எண்ணெயை இப்படியும் பயன்படுத்தலாம் என உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..!


தேங்காய் எண்ணெயை உணவு சமைக்கும் போது பயன்படுத்தி அதனை உட்கொண்டிருப்பீர்கள். ஆனால் தேங்காய் எண்ணெயால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதைப் பற்றி அறிவீர்களா?

01. டயப்பர் கிறீம்
குழந்தைகள் அணியும் டயப்பர்களை மாற்றும் ஒவ்வொரு வேளையும் அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் பூசி விடுவது சிறந்தது. சருமம் எரிச்சலின்றி மிருதுவாக இருக்கும்.

02. கறைகளை அகற்ற
ஆடைகளில் உள்ள கறைகள் மீது தேங்காய் எண்ணெயை பூசி சிறிது நேரம் வைத்திருந்து அதனை கழுவினால் கறைகள் அகன்று விடும்.

03. வரண்ட சருமத்திற்கு
வரண்ட சருமம் உள்ளவர்கள் இரவு படுக்கச் செல்லும் முன், தேங்காய் எண்ணெயை தலையில் தடவி துணித் துண்டு ஒன்றினால் தலை முடியை சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் அந்த துணியை அவிழ்த்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை முடி மென்மையாக இருக்கும்.


04. மொய்ஸ்சரைசர்
காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு தேங்காய் எண்ணெயை முகத்தில் பூச வேண்டும். அதே போல் இரவு படுக்கச் செல்லும் முன்னும் தேங்காய் எண்ணெய் பூச வேண்டும். ஆரம்பத்தில் முகம் எண்ணெய்த் தன்மையாக இருக்கும். எனினும் பிறகு சருமமானது எண்ணெயை உறிஞ்ச ஆரம்பிக்கும். சருமம் மிருதுவாக மாறும்.

05. மேக்-அப்ரிமூவர்
முகத்தில் உள்ள மேக்-அப்பை அகற்ற முகத்தின் மீது தேங்காய் எண்ணெயை பூசி ஈரமான துணி ஒன்றினால் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள மேக்-அப் முற்றாக அகன்று விடும்.

06. சிக்கற்ற முடிக்கு
சிக்கலான முடியை கொண்டவர்கள் கைகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி முடியில் தேய்ப்பதன் மூலம் சிக்கற்ற தலை முடியை பெற முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!