இந்தியப் பெருங்கடலில் அமைதியை உருவாக்க வேண்டும் – இலங்கையிடம் வியட்னாம் வலியுறுத்தல்..!!


இந்தியப் பெருங்கடலில் அமைதியும், செழிப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வியட்னாமின் துணைப் பிரதமர் பாம் பின் மின்னும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்க ஹனோய் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வியட்னாமின் துணைப் பிரதமர் பாம் பின் மின்னைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன் போதே, இந்தியப் பெருங்கடலில் அமைதியும், செழிப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தை மேலும் வலுப்படுத்தவும் இரண்டு தலைவர்களும் இணங்கியுள்ளனர். அத்துடன், 2020இல் இருதரப்பு வணிகத்தை 1 பில்லியன் டொலராக அதிகரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.source-puthinappalakai

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!