ஜோடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போய்டுங்க – கொந்தளிக்கும் பிரபல நடிகை…!


பிக் பாஸ் வீட்டிலிருந்த மஹத் நேற்று வெளியேறியதை பொறுத்துக்கொள்ள முடியாத முந்தைய சீசன் போட்டியாளர் ஹார்த்தி, ஜஸ்வர்யா மற்றும் யாஷிகாவை திட்டி டுவிட்டர் பக்கதில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான மஹத் நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இது குறித்து யார் வருந்தினாரோ இல்லையோ ஜஸ்வர்யா மற்றும் யாஷிகா தேம்பி தேம்பி அழுதனர்.

ஜஸ்வர்யா, யாஷிகாவால் தான் மஹத் இப்படி சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என சிலர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் மஹத் எலிமினேஷன் செய்யப்பட்டது குறித்து பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் ஆர்த்தி டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில், ‘சிறந்த நடிகைகளுக்கான விருது யாஷிகா மற்றும் ஜஸ்வர்யாவுக்கு வழங்க வேண்டும். எல்லாம் முதலை கண்ணீர். அடுத்து டபுள் எலிமினேஷன் செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஜோடியாக வீட்டை விட்டு போய்டுங்க. மஹத் உனது காதலி பிராச்சி உன்னை வாழ்க்கையிலிருந்து எலிமினேட் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து நெட்டிசன்கள் ஜஸ்வர்யா மற்றும் யாஷிகாவை தாறுமாறாக வைத்து கலாய்த்து வருகின்றனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!