என் வீட்டுக்கு போன் செய்து அசிங்கமாக பேசுகிறார்கள்: கதறிய அறம் பட இயக்குனர்.!!


நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற படம் அறம். இந்த படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார்.

அறம் திரைப்படம் அனைவரின் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தாலும், மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் இயக்குநர்.

இது குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கோபி நயினார் பேசியதாவது:-

ஆழ்துளை கிணற்றில் பல குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழந்ததை பார்த்துதான் நான் அறம் கதையை எழுதினேன்.

இந்தப்படத்தை நயன்தாரா தயாரிப்பார் என்று தான் அவரிடம் அறம் கதையை சொன்னேன். ஆனால் அவரே நடிப்பார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதனால் வசனங்களை கொஞ்சம் வீரியமாக எழுதினேன்.


இங்கு கவர்ச்சி நடிகைகள் என்று யாரும் கிடையாது. ஆனால் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்துகிறார்கள்.

ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் அறம் படத்தை பாராட்டினார்கள். இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த என்னால் அந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.

நள்ளிரவில் போன் செய்து, சிலர் என் வீட்டு பெண்களை எல்லாம் இழுத்து தவறான வார்த்தைகளை சொல்லி திட்டுகிறார்கள். இதனால் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.

எதுவாக இருந்தாலும் நான் நேரடியாக விவாதம் செய்ய தயாராக உள்ளேன்.

ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தாறுமாறாக விமர்சிக்கிறார்கள்.


தொடர்ந்து சமூக பிரச்னைகளுக்கான விஷயங்களை தான் படமாக்க போகிறேன்.

ஒருவேளை.., எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காவிட்டால்., வாட்ச்மேன் வேலைக்கு கூட போவேனே தவிர., மசாலா கதைகளை படமாக எடுக்கமாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!