2018ம் ஆண்டு பூமியை விழுங்க காத்திருக்கிறது பேராபத்து! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்..!


வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து கடந்த 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொலராடோ எனும் பல்கலையை சேர்ந்த ராபர்ட் பில்ஹம் மற்றும் மோன்டானா பல்கலையின் ரெபிக்கா பென்டிக் ஆகிய ஆராச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கைகள் இந்த ஆண்டு ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: நாள்தோறும் சில மில்லி செகண்ட் என்ற அளவில் புவியின் சுழற்சியில் மாற்றம் ஏற்படும்.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக புவி சுழற்சி வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் வருகிறது.

பொதுவாக ஆண்டிற்கு 15 முதல் 20 முறை ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் நிகழும்.


ஆனால் தற்போது புவியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக 2018 ல் சராசரியாக 25 முதல் 30 முறை நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இது போன்ற புவி சுழற்சி வேகம் குறைந்து, 5 வது ஆண்டில் அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும்.

வரும் 2018-ம் ஆண்டில் துவங்க உள்ள அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்களுக்கான புவியின் சுழற்சி வேக குறைவானது 4 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது.

இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு ஆய்வு முடிவு கடந்த அக்டோபர் மாதமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

32 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது போன்ற ஆய்வுகளில் நிலநடுக்கங்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!