முகப்பரு, பொடுகுத் தொல்லையா..? பெண்களே லிஸ்டரின் பற்றி தெரியுமா..?


சந்தையில் கிடைக்கும் லிஸ்டரின், வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் என்பது எமக்குத் தெரியும். ஆனால், வாய் துர்நாற்றத்தை போக்க மட்டுமல்லாது வேறு சில காரணங்களுக்காகவும் லிஸ்டரினை பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அவை என்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. முகப் பருக்களின் மேல் நாளொன்றுக்கு இரண்டு முறை இந்த லிஸ்டரினைப் பூசுவதன் மூலம் முகப்பருக்கள் மறைந்து விடும்.

02. நாம் பயன்படுத்தும் பற்தூரிகையை சில நிமிடங்களுக்கு லிஸ்டரினில் ஊறவிடுவதன் மூலம், அதிலுள்ள கிருமிகள் அழியும்.

03. பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் லிஸ்டரின் சிறிதளவை எடுத்து அதனை தலை ஓட்டில் மசாஜ் செய்து துவாய் ஒன்றின் மூலம் சிறிது நேரம் தலை முடியை கட்டி வைத்திருத்தல் வேண்டும். பின்னர் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்கும்.

04. கால் விரல்களில் ஏற்படும் பங்கஸினை நீக்கும். குளிப்பதற்கு முன்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் லிஸ்டரின் கலந்து அதில் சுமார் அரை மணித்தியாலத்திற்கு கால்களை வைத்திருந்தால் பங்கஸ் நீங்கி விடும்.


05. கழிவறை அசுத்தமாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனுடன் லிஸ்டரின் கலந்து அந்தக் கலவையால் கழிவறையை சுத்தம் செய்தால் கழிவறை பளிச்சென்று காணப்படும்.

06. ஏதேனும் பூச்சுக்கடியால் அரிப்பு ஏற்படின் அந்த இடத்தில் லிஸ்டரினை தடவினால் அரிப்பு உடனே நீங்கும்.

07. பஞ்சில் லிஸ்டரின் சிறிதளவு இட்டு அதனை அக்குள் பகுதியில் பூசினால் பக்டீரியாக்கள் அழிவதோடு நல்ல மணமும் ஏற்படும்.

08. செல்லப் பிராணிகளில் காணப்படும் உண்ணித் தொல்லையை நீக்க, லிஸ்டரின் சிறிதளவை செல்லப் பிராணிகள் மேல் தடவி வாருங்கள். உண்ணித் தொல்லை நீங்கும்.

09. துணி துண்டொன்றில் லிஸ்டரின் சிறிதளவு இட்டு கம்பியூட்டர் மற்றும் டி.வி போன்றவற்றின் திரையை சுத்தம் செய்தால் அழுக்கு நீங்கும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!