வெள்ளத்தில் சிக்கி உதவி கேட்டு கதறிய ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!


வெள்ளத்தில் சிக்கி கொண்ட நடிகை தயவு செய்து உதவுங்கள் என உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகையும், எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளருமான சீதாலட்சுமி, கேரளா வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் 375-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட நடிகை சீதாலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்.

அதில், உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் நாங்கள் தவிக்கிறோம். பாதுகாப்பற்ற முறையில் நாங்கள் உள்ளோம், இங்கு குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளதால் எங்களை காப்பாற்ற எதாவது செய்யுங்கள் என கோரியுள்ளார். இதனிடயே தற்போது சீதாலட்சுமியும் அவருடன் இருந்தவர்களும் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தகவலை அவரே சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வெள்ளத்துக்கு கேரள நடிகர், நடிகைகளும் தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் பிரிதிவிராஜின் வீட்டுக்குள் வெள்ளம் சென்றதையடுத்து, மீட்புப் படையினர் அவரின் வீட்டுக்குள் சென்று அவரின் தாயைப் பாதுகாப்பாக மீட்டனர். நடிகர் ஜெயராமும் அவரின் குடும்பத்தினரும் காரில் நேற்றுமுன்தினம் சென்ற போது, நிலச்சரிவில் சிக்கினார்கள். பின்னர் இந்தத் தகவல் அறிந்து மீட்புப் படையினர் வந்து அவர்களை மீட்டனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!