கேரள வெள்ளத்தை கேலியாக விமர்சித்த இளைஞருக்கு நடந்த விபரீதம்..!


வளைகுடா நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் ஒருவர் கேரளாவில் வெள்ளம் பாதித்தவர்கள் குறித்து கேலியான கருத்து வெளியிட்டதால் வேலையை இழந்தார்.

கேரளாவை சேர்ந்தவர் ராகுல் சேரு பாலையாட்டு இவர் ஓமனில் உள்ள லூளூ நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் கேசியராக பணியாற்றி வந்தார். இவர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கேலி செய்து தனது பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து லூளூ நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளது.

அந்த நிறுவனத்தில் மனித வள மேலாளர், நஸ்ர் முபாரக் சேலம் அல் மவாலி எழுதி உள்ள கடிதத்தில்,

கேரளாவில் நடக்கும் வெள்ளம் சூழ்நிலையை சமூக ஊடகங்கள் மீது உங்கள் மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் அவமானகரமான கருத்துக்கள் காரணமாக, உடனடியாக நீங்கள் வேலையை விட்டு நிறுத்தபட்டு இருக்கிறீர்கள் என தெரிவித்து கொள்கிறோம்.

“உங்கள் அதிகாரப்பூர்வ பொறுப்புகளை உடனடியாக நீங்கள் ரிபோர்ட் செய்யும் நிர்வாகிக்கு ஒப்படைக்கவும் உங்கள் இறுதி கணக்கு வழக்கை சம்பந்தபட்ட துறையைத் தொடர்பு கொள்வதற்கும் உடனடியாக நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.”என கூறப்பட்டு உள்ளது.

இத்தகவலை துபாய் சார்ந்த கலீஜ் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.

தனது சர்ச்சையான கருத்தால் ஏகபட்ட விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து அவர் பேஸ்புக்கில் வீடியோ மூலம் மன்னிப்பு கோரி இருந்தார்.

இந்திய கோடிசுவரர் மற்றும் லூளூ குழுமத்தின் உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி கேரளாவில் வெள்ளம் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ. 26 கோடி நிவாரண நிதிவழங்கி உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!