மக்கள் செல்வனின் 25 வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய்சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தில காணோம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. விஜய்சேதுபதியின் 25 வது படமான இதில் அவர் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும், இதில் இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘செக்கசிவந்த வானம்’ செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். -Source:tamil.eenaduindia

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.