கணவனை காரில் அடைத்து வைத்து கொன்ற மாடல் அழகி பரபரப்பு வாக்குமூலம்..!


ராகேல் கேசில் ஹட்ச்சன் என்ற பிகினி மாடல் அழகி தனது கணவர் பேய் ஒட்டுபவர் என நினைத்து காரில் அடைத்து வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னியை சேர்ந்த முன்னாள் பிகினி மாடல் அழகி ராகேல் கேசில் ஹட்ச்சன் (40). இவருடைய முன்னாள் காதலன் பால் ஆன்ட்ரு வில்கின்சன் (39). பல நாட்களாக ரகோலுக்கு தனது கணவர் தீய சக்திகளுடன் தொடர்பு கொண்டு போய் ஓட்டும் தொழிலை பார்த்து வருவதாக சந்தேகம் இருந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு 41 வயதுடைய உடல் காரில் அடைக்கப்பட்டு சாலையோரமான மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது . இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில் இவர் ரகோல் கணவர் என தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் ரகோல் மற்றும் அவரது முன்னால் காதலன் பால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது ரகோல் தனகு குழந்தைகளை தீய சக்திகளிடமிருந்து, பேய் ஓட்டும் கணவரிடமிருந்தும் காத்துக்கொள்ள நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

பின்பு ரகோல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த 9 வயது சிறுவன் கூறுகையில், கொலை செய்யப்படுவதற்கு முன்தினம் ரகோல் மற்றும் அவரது கணவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரகோல் கணவரை மாடி படியில் வைத்து பலமாக தாக்கி, கரை நீக்கும் ஸ்பிரேவினை அவரது முகத்தில் அடித்ததாக சிறுவன் கூறியுள்ளான்.


மேலும் ரகோல் ‘ஒழுங்காக ஒப்புக்கொள், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்’ என்று கூச்சலிட்டதையும், அவரது கணவர் ‘ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என கூறியதை கேட்டதாகவும் சிறுவன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

பின்பு அவர் கயிற்றால் இறுக்கமாக கட்டப்பட்டு முகத்தில் ரத்தம் வடிந்தவாரு, காரின் பின்னால் அடைக்கப்பட்டதை பார்த்ததாக சிறுவன் கூறியுள்ளான்.

உடற்கூறாவின் போது அவர் பலமாக தாக்கப்பட்டிருந்தது உறுதியானது. இதைதொடர்ந்து இருவரும் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என கூறியுள்ளனர். தனது இரு குழந்தைகளை தனது கணவர் வன்கொடுமை செய்ததாக ரகோல் புகார் கூறியுள்ளார்.

பேய் ஓட்டுவதற்கென சிறைச்சாலைக்கும், மனநல மருத்துவமனைக்கும் ரகோல் கணவர் அடிக்கடி சென்று வருவது விசாரணையின் தெரியவந்துள்ளது. மேலும் வீட்டை பரிசோதித்த போலீஸார் சோதனையின் போது பேய் ஓட்டும் புனித நீர் கிடைத்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மனநல மருத்துவர் ரகோலை சோதனை செய்தார். இதில் ரேகால் தான் வேண்டுமென இக்கொலையை செய்யவில்லை என்றும், எனது கணவர் செய்த வன்கொடுமைக்கு தக்க தண்டனை வாங்கி தரவேண்டும் என நினைத்தேன் என்றும் அவர் மருத்துவரிடம் கூறியுள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!