உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் ரூ.16 லட்சம் வசூலித்த மருத்துவமனை… அதிர்ச்சியில் மக்கள்…!


புதுடெல்லியை சேர்ந்த ஜெயந்த் சின்ஹா என்பவரின் மகள் ஆதியா என்பவர், கடந்த ஆகஸ்ட் 27 ல் காய்ச்சலால் அவதியுற்றார். இதனையடுத்து, சிறுமியை டெல்லியின் துவாரகா நகரில் உள்ள ராக்லாந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு டெங்கு இருப்பது உறுதியானது. இதனையடுத்து, டாக்டர்கள் அறிவுரைப்படி, குர்கானில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31ல் அனுமதிபட்டார்.

அங்கு, 10 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதும், உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை.

தொடர்ந்து, செப்டம்பர் 15ல் ஆதியா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை கட்டணமாக ரூ.15.79 லட்சம் வசூலித்து உள்ளது


இது குறித்து ஆதியா குடும்பத்தினர் கூறுகையில்

சிகிச்சையின் போது, 1600 கையுறைகள், 660 சிரிஞ்சுகள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்கி கொடுத்தோம். ஆனால், இவை பயன்படுத்தப்பட்டதா என தெரியவில்லை.

கடந்த செப்டம்பர் 14ல் ஸ்கேன் செய்து பார்த்த போது, மூளையில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஆதியாவை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தோம்.ஆனால், ஆம்புலன்ஸ் வசதி கூட மருத்துவமனையை செய்து தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வைரல் கட்டணம் தொடர்பாக, ஜெயந்த் சின்ஹாவின் நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது நண்பரின் 7 வயது மகள் கடந்த 15 நாட்களாக போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதற்காக 2700 கையுறைகள் உட்பட ரூ.18 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்து விட்டார் எனக்கூறியிருந்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனை பார்த்த சுகாதார அமைச்சர் ஜேபி நட்டாவும் விரிவான தகவல்களை அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். இந்த புகார்களை மறுத்துள்ள போர்டிஸ் மருத்துவமனை நிர்வாகம், ஆதியாவுக்கு முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. விரிவான அறிக்கை சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். கட்டணமாக, ரூ.15.79 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!