அக்டோபருக்கு பிறகு தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும்.. பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்..?


2015ல் சென்னையில் பெரு வெள்ளம் வந்தாலும் வந்தது, அதிலிருந்து வருடா வருடம் பஞ்சாங்கம் என்ற பெயரில் பலரும் தங்கள் கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து விட்டனர்.

தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கேரளமும், கர்நாடகத்தின் சில மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன.

அம்மாநிலங்களில் பெய்து வரும் மழையால் தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் நிலைமை மோசமாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழகமும் கேரள மாநிலத்தை போல பயங்கர மழை பாதிப்புக்கு ஆளாகும் என்று புயல் ராமச்சந்திரன் கணித்துள்ளார்.
அக்டோபர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தின் வடபகுதியான மதுராந்தகத்திற்கு அடுத்து ஆரம்பித்து தென் தமிழகம் வரை மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மழை நிற்க வேண்டி யாகம் நடத்தும் அளவிற்கு மழைப்பொழிவு இருக்கும் என்றும், இப்போது இருந்தே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் தான் பாதிப்பை ஓரளவிற்காவது கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

தற்போதுள்ள வானிலை முன்னெச்சரிக்கை வெறும் சில மணி நேரத்தில் மட்டுமே விடுக்கப்படுவதால், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பேரிடர் சூழ்நிலையில் வெளியேற முடியாமல் சிக்கி விடுகின்றனர்.

அறிவியலையும் மீறி இதுபோன்ற சில நம்பிக்கைகள் அவ்வப்போது தலைகாட்டினாலும், இதனை மூட நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளாமல், ஒருவேளை இப்படியொரு இயற்கை பேரிடர் நடந்தால் அதிலிருந்து மக்களை காக்கக எனென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு யோசித்து செயல்பட்டால், அது போன்ற இக்கட்டான சூழல் நிலவும் போது எந்த வித சலனமும் இன்றி செயல்பட முடியும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது தமிழகத்தில் காவிரிக் கரையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக இ.ஆ.ப. அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


காவிரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுதல், வெள்ளப் பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்லாமல் தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் தான் இந்த குழுக்கள் செய்கின்றனவே தவிர, தொலைநோக்குப் பார்வையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, பாதுகாப்புப் பணிகளையோ செய்யவில்லை.

தமிழகத்திலுள்ள காவிரி உள்ளிட்ட ஆறுகளில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல், நீர் செல்லும் பாதைகளில் அடைப்புகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆட்சியாளர்களின் தவறுகள் தான் காரணமாகும்.

அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டால் அதை தமிழக அரசாலும், தமிழ்நாட்டு மக்களாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது.

எனவே, மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதர்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப் படைகளை முன்கூட்டியே அழைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!