பெண்களின் மார்பகங்கள் பெரிதாக என்ன காரணம்? இது ஆபாசம் அல்ல..!!


பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது மார்பகங்கள் தான். சில பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருக்கிறது என்றும், சிலர் பெரியதாக இருப்பதால் அசௌகரியமாக இருக்கிறது எனவும் கவலைப்படுகிறார்கள்.

பொதுவாக பெண்களின் மார்பகங்கள் சில குறிப்பிட்ட தருணங்களிலன்போது அளவில் மாற்றம் பெறும். அவை எப்போது?…

பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் போது, மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும். அதிகமான கொழுப்பு மார்பக பகுதியில் சேர்வதால், மார்பக அளவு அதிகரிக்கிறது. அதேபோல் உடல் எடை குறையும் போதும், மார்பக அளவும் குறையும். உணவில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு காரணமாகிறது.


உடலுறவின் போது பெண்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், அந்த சமயத்தில் மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.

பெண்கள் வயதிற்கு வரும் வரை உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவாக இருக்கும். அவர்கள் பருவமடைந்ததும் ஏற்படுகிற ஈஸ்ட்ரோஜென் மாற்றத்தால் மார்பக அளவிலும் மாற்றம் ஏற்படும்.

மாதவிலக்கு ஏற்படுவதற்குமுன் ஈஸ்ட்ரோஜென் மார்பகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் மார்பக அளவும் அதிகரிக்கும். மாதவிலக்கு முடிந்ததும் இயல்பு நிலைக்கு மாறும்.

பெண்களின் இறுதி மாதவிலக்குக்கு பிறகு கொழுப்பு செல்கள் வீக்கமடைவதாலும் மார்பக அளவுகள் அதிகரிக்கும்.

பெண்கள் கர்ப்பகாலத்தில் மார்பகத்தின் அளவு அதிகரிப்பதாக உணர்வார்கள். கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றமே இதற்கு காரணமாகிறது. மேலும் சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மார்பகத்தில் எரிச்சல் மற்றும் காயம் போன்றவற்றை உணர்வார்கள்.


பெண்கள் கருத்தரிப்பு மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் மார்பக அளவு அதிகரிக்கும். இந்த மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிப்பதால், மார்பகத்தின் அளவும் அதிகரிக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!