ரவிராஜ் படுகொலை வழக்கு – 6 மாதங்களுக்கு முன்னரே மலேசியாவில் இருந்து நாடு திரும்பினார் நேவி சம்பத்..!!


கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நேவி சம்பத், மலேசியாவில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சி நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவரை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சன நிரஞ்சன சில்வா முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, இன்று வரை அவரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிவான் மீண்டும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டார்.source-puthinappalakai

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!