இப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு… ஆனால் மறுபடியுமா..? சிம்புவால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!!


செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு. இது அரசியல் கதைக்களம் கொண்ட படம் என அதன் போஸ்டர் மூலம் உறுதியானது.

ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்து வரும் நிலையில், சிம்புவின் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் சிம்பு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெங்கட்பிரபு தான் இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்தை வித்தியாசமான கெட்டவன் ரோலில் காட்டியிருந்தார்.

அதேபோல், மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரமும் முற்றிலும் கெட்டவனாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படம் முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவுள்ளது.

காதல் சர்ச்சை, ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதால், திரையுலகில் சிம்புவிற்கு கெட்டப் பெயர் ஏற்பட்டது. இதனால் அவரது பட வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டது. தற்போது தான் தன் மீதான கெட்டப் பெயர்களை மாற்றி நல்ல பிள்ளையாக மாறியுள்ளார் சிம்பு. இதனால் தற்போது அவர் வசம் நான்கு படங்கள் உள்ளன.

இந்த சூழ்நிலையில் இது போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பது சரி தானா என்ற கேள்வியும் அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் நிச்சயம் இளைஞர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்கிறது படக்குழு.source-tamil.filmibeat

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!