கார் விபத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்ரம் மகன்..!! கைதாகி ஜாமினில் விடுவிப்பு..!!


நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்தது.

இதில், ஆட்டோ டிரைவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர்.

துருவ் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஜாமினில் விடுவித்தனர்.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!