பள்ளியில் 7 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த எலக்ட்ரீஷியன்..!


2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளியில் வைத்து அங்கு பணிபுரியும் எலக்ட்ரீஷியன் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது தில்லியில் என்டிஎம்சி ( New Delhi Municipal Council school) இயங்கி வருகிறது. இங்கு எலக்ட்ரீஷியனாக பணிபுரிபவர் ராம் அஸ்ரே (37). இவர் கடந்த புதன் கிழமை அன்று அப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளி நேரத்தில் பம்ப் நிலையத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்பு ராம் இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார்.

பயமடைந்த சிறுமி பெற்றோர்களிடம் சொல்லாமல் மறைத்துள்ளார். புதன்கிழமை இரவு சிறுமியின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதை கண்ட பெற்றோர் அதிர்ச்சிடைந்தனர். பின்பு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் சிறுமி பலாத்காரம் செய்ப்பட்டது உறுதியானது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி சிவப்பு சட்டையில் இருந்த ஒருவர் தன்னை இப்படி செய்ததாக போலீஸாரிடம் கூறினார். இதன் அடிப்படையில் விசராணை செய்த போலீஸார் குற்றவாளி ராம் அஸ்ரே என்பதை கண்டறிந்து கைது செய்தனர்.

குற்றவாளி ராம் மீது போக்சோ சட்டத்தின் (Protection of Children from Sexual Offences) கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!