கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய சாமியார் பரபரப்பு பேட்டி..!


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவை வெள்ளியங்கிரி மலையை சேர்ந்த உதயகிரி சுவாமிகள் இன்று அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி நினைவிடத்தில் கோவை வெள்ளியங்கிரி மலையை சேர்ந்த உதயகிரி சுவாமிகள் இன்று அஞ்சலி செலுத்தினார். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் கோரக்கு சித்தர் தவம் செய்த பகுதியில் வசித்து வருவதாக கூறும் இவர் பொதுமக்களோடு பொது மக்களாக நின்று அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்தார்.

அப்போது அவர் சமாதி அருகே சென்று பார்க்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார். இதையடுத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை உள்ளே அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.

கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தியது பற்றி அவர் கூறியதாவது:-

கலைஞர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக இருந்தாலும் அன்பு, அரவணைப்பு, சாந்தம் ஆகியவற்றைத்தான் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பல நன்மைகளை அவர் செய்துள்ளார். சொல்லப் போனால் அவரும் சித்தர் தான்.

அபூர்வமான மனிதர்களில் அவரும் ஒருவர். 7 வயதில் இருந்தே வெள்ளியங்கிரி மலையில் நான் சேவை செய்து வருகிறேன். 17 வயதுக்கு பின்னர் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து மனைவி, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீண்டும் கடவுளுக்கு பணி செய்ய சென்றுவிட்டேன். எனது குருநாதர் நாராயண குரு. ஜம்முவில் உள்ள அவரிடம் தான் நான் தீட்சை பெற்றேன். என்னை கடவுள் தான் இங்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!