தமிழகத்தில் 12 முதல்வர்கள் – 15 பிரதமர்களுடன் அரசியல் செய்த ஒரே கலைஞர்..!


தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கையில் 12 முதல்வர்களையும், 15 பிரதமர்களையும் சந்தித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எழுத்து, இலக்கியம், சினிமா என பலதுறைகளிலும் வல்லவராக திகழ்ந்த கருணாநிதி, தனது அரசியல் காலத்தில் தமிழகத்தில் 12 முதல்வர்களையும், இந்தியாவில் 15 பிரதமர்களையும் சந்தித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு, குல்சரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜிவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், ஹெச்.டி.தேவகௌடா, இந்தர் கே.குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என 15 பிரதமர்களின் ஆட்சி காலத்தில் அரசியல் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் ராஜாஜியில் துவங்கி, டி.பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ் குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவச்சலம், சி.என்.அண்ணாதுரை, எம்ஜி.ராமச்சந்திரன், ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 12 முதல்வர்களின் ஆட்சிகாலத்தில் அரசியல் செய்துள்ளார்.-
Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!