குழந்தைகள் முன்பு பெற்றோர்களே இத மட்டும் எப்பவும் செய்யாதீங்க..!


பெற்றோர்கள் என்பவர்கள் தங்களது குழந்தைகள் மீது எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு அதிக அக்கறையுடனும் செயற்படுவர். ஆனால் சில சமயங்களில் பெற்றோர்கள் செய்யும் செயற்பாடுகளே குழந்தைக்கு வினையாக அமைந்து விடும்.

ஆம், சில சமயங்களில் பெற்றோர்கள் பின்வருவனவற்றை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வளரும் குழந்தைகளைப் பொருத்தமட்டில் இது முக்கியமானதாகும்.

01. குழந்தைகள் சார்பில் பெற்றோர்கள் கதைத்தல்
‘உங்களுடைய பெயர் என்ன?’ என ஒருவர் குழந்தையொன்றிடம் கேட்கும் போது, அக் குழந்தையின் தாய் அதற்கு பதிலளித்தல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகளையே அதற்கு பதிலளிக்க விட வேண்டும். இதன் மூலம் அவர்களது ஆளுமை விருத்தியடையும்.

02. குழந்தைகளிடம் நண்பர்களைப் போல் பழக முற்படுதல்
குழந்தைகளிடம் நண்பர்களைப் போல் பழகுவதன் மூலம் குழற்தைகள் தங்களுக்கு உண்மையாக இருப்பார்கள் என்று எண்ணி அவர்களிடம் நண்பர்களைப் போல் பழகுவார்கள் சில பெற்றோர்கள். என்ன தான் இருந்தாலும் ஒரு கட்டத்தில் சில விடயங்கள் பெற்றோரிடம் பகிரப்படாது. மாறாக அவை நண்பர்களிடமே பகிரப்படும். நண்பர் வேறு பெற்றோர் வேறு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

03. கடுமையாக நடந்து கொள்ளல்
குழந்தைகளுக்கு எது நல்லது எது நல்லதல்ல என்பதை பெற்றோர்கள் அறிவார்கள். எனினும். அதனை எடுத்துக் கூறுவதில் அவர்களிடம் கடுமை கூடாது. அவர்கள் விருப்பத்திற்கிணங்க இருக்க விடுதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் குழந்தைகள் என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். அதே சமயம் அவர்களை பாதுகாக்கவும் வேண்டும்.


04. குழந்தைகளுக்கு தேவைக்கு மேலதிகமாக உதவ முற்படுதல்
2 அல்லது 3 வயது குழந்தைகளால் தங்களது உடைகளை தாமாகவே கழற்றிக் கொள்ள முடியும். எனினும் சில பெற்றோர் குழந்தைகளை இயங்க விடாது அவர்களே அதை செய்வர். இது தவிர்க்கப்பட வேண்டும்.

05. குழந்தைகளின் விருப்புகளுக்கு இடம் அளிக்காதிருத்தல்
பெற்றோர் குழந்தைகளின் நலன் கருதி சில சமயங்களில் அவர்களின் விருப்பத்திற்கிணங்க செயற்பட விடாதிருப்பார்கள். எனினும், இந்த நடவடிக்கை மூலம் குழந்தைகள் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக எதையெல்லாம் செய்யாதே எனச் சொல்கிறார்களே அதையெல்லாம் செய்ய எத்தணிப்பார்கள் குழந்தைகள்.

06. குழந்தைகளிடம் உள்ள பணத்தின் அளவை அறிந்து கொள்ள முயற்சித்தல்
குழற்தைகளுக்கு வழங்கும் சொற்பபணத்தை அவர்கள் என்ன செய்தார்கள் என ஆராய்வதை தவிர்க்க வேண்டும்.

07. குழந்தைகளுக்கு விருப்பமானவற்றை மேற்கொள்ள விடாதிருத்தல்
குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதற்கு மதிப்பளித்து அதை மேற்கொள்ள இடமளியுங்கள். உங்கள் விருப்பங்களை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

08. கட்டிளம் வயது பிள்ளைகளின் விடயங்களில் எந்நேரமும் தலையிடுதல்
குழந்தைகள் கட்டிளம் வயதை அடைந்தவுடன் அவர்கள் செய்யும் எல்லா வேலையிலும் தலையிட நினைப்பது தவறு. அவர்களது இளவயதை இனிமையாகக் கழிக்க உதவி புரியுங்கள். இதன் மூலம் எது நடந்தாலும் அவர்களே அவற்றை பெற்றோரிடம் பகிரும் நிலைமை தோன்றும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!