உங்களுக்கும் முடி உதிரும் பிரச்சினையா? அடர்த்தியை அதிகரிக்க இதோ ஆயுர்வேத குறிப்புக்கள்..!


முடி உதிர்கிறதா? உடனே வேலைப் பளு நிறைந்த வாழ்க்கை முறையும், மன அழுத்தம் மட்டுமே காரணம் என சாடி விடுகிறோம். முடி உதிர்வு எல்லோருக்கும் பொதுவானது. அதற்கான காரணங்களை தேடுவதை விட்டு முடியை தகுந்த முறையில் பராமரிப்பதற்கான முயற்சிகளை எடுப்பது மிகவும் முக்கியமானது.

நீங்கல் முடியை பராமரிப்பதற்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்துகிறீர்கள்?

ஆமணக்கு எண்ணெய்யால் முடிக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?.

•ஆமணக்கு எண்ணெய் முடி வளர்வதை அதிகப்படுத்துவதுடன், தலைப் பகுதியில் பிரச்சினைகளைத் தீர்த்து, சிறந்த கட்டமைப்பு உள்ள முடியைப் பெற உதவுகிறது.

•இதில் பங்கஸ், பக்டீரியா தொற்றுக்களிற்கு எதிராக செயற்படும் தன்மை கொண்டதனால் தலையை தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.

•இதில் உள்ள அதிகப்படியான புரோட்டின் முடியின் கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

•இதில் காணப்படும் ரிஸினோலிக் அமிலம் தலைப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர உதவும்.

•ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள அண்டிஒக்ஸிடன் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

ஏன் நல்லெண்ணெய்யை முடிக்கு பயன்படுத்த வேண்டும்?

•நல்லெண்ணெய்யில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதனால் உலர்ந்து பாதிப்படைந்த முடிக்குச் சிறந்தது.

•இதில் காணப்படும் புரோட்டின், விட்டமின் ஈ, பி மற்றும் கனியுப்புக்களான மக்னீசியம், பொஸ்பரஸ், கல்சியம் முடி வளர்வதற்கு உதவுகிறது.

•இது இலகுவாக மண்டையோட்டினால் உறிஞ்சிக் கொள்ளப்படுவதனால் தலை உலர்வடைவதை தடுத்து ஈரலிப்பாக இருக்கும்.

•இது முடியின் நிற மாற்றம் அடைவதை தடுப்பதுடன், இறந்த முடிப்பகுதிகளை புத்துணர்ச்சி பெற உதவுகிறது.


முடி கொட்டுவதைத் தடுப்பது எப்படி?

•ஆமணக்கு எண்ணெய்யையும் நல்லெண்ணெய்யும் முடி உதிர்விற்காக பயன்படுத்துவதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.

•ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய்யும், தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து மைக்ரோவேவில் சில நிமிடங்களிற்கு சூடாக்கவும்.

• அதில் ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யும், நல்லெண்ணெய்யும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

•கழுவிய ஈரப்பதம் உள்ள முடியில் இந்த எண்ணெய் கலவையை தடவவும்.

•தலையில் வட்டவடிவில் 15 நிமிடங்களிற்கு நன்றாக மசாஜ் செய்யவும்.

•சூடான நீரில் நனைத்த துவாயை தலையில் சுற்றிக் கட்டி 1-2 மணி நேரம் வரை விடவும். இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பும் இதனை செய்ய முடியும்.

•பின்பு மெனமையான சம்போவால் தலையை கழுவவும்.

•வாரத்தில் இரு தடவைகள் இந்த சிகிச்சையை செய்வது சிறப்பானது.

சில முக்கிய குறிப்புக்கள்.

•ஆமணக்கு எண்ணெய் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், எனவே அதனை பரீட்சித்து பயன்படுத்துவது சிறந்தது.

•இந்த சிகிச்சையுடன் தினமும் உணவில் புரோட்டின், நார்ப் பொருட்கள், நல்ல கொழுப்பு, விட்டமின்கள் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

•யோகா, தியானம் செய்வதனால் மன அழுத்தம் குறைவடைந்து முடி உதிர்வைத் தடுக்கும்.

•முடியின் தன்மைக்கு ஏற்றவாறு சம்போக்களை தேர்வு செய்வது அவசியமானது.

•அமோனியா அதிகம் உள்ள முடி நிறப் பூச்சுக்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

முடியை உலர வைப்பதற்கான சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!