உங்கள் மீது கணவனுக்கு ஈர்ப்பு உள்ளதா? இத வைச்சு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்..!


கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் உள்ள உறவானது உண்மையானதாகவும் கலப்படமற்ற அன்புடையதாகவும் இருத்தல் வேண்டும்.

ஆரம்பத்தில் கணவன் மனைவியர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தாலும் காலப் போக்கில் சில கணவன் மனைவியரிடையே ஏதோ ஒரு சில காரணங்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர்களிடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும்.

தம்பதியருக்கு இடையில் இடைவெளி ஏற்பட கருத்து வேறுபாடு மட்டுமே காரணமாக அமையாது. எனினும் இது போன்ற சில சந்தர்ப்பங்களில் மனைவியின் மீது கணவனுக்கு இருந்த ஈடுபாடு குறைந்து விட்டது என்பது அந்த மனைவிக்கே தெரியாமல் இருக்கும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தனது கணவர் ஏன் தன் மீது வெறுப்பை காட்டுகிறார் என்பதை மனைவியால் புரிந்து கொள்ள முடியாதிருக்கும்.

பின்வருவனவற்றை கொண்டு ஒரு கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள ஈடுபாடு குறைவடைந்துள்ளது என்பதை அறிய முடியும்.

01. மனைவியினது உருவத்தைப் பற்றி ஏளனமாகப் பேசுதல். குறிப்பாக மனைவியின் மனது பாதிக்கப்படும் என்பதைப் பற்றி சிறிதளவேனும் சிந்திக்காதிருத்தல்.

02. மனைவி செய்யும் வேலைகளில் இருக்கும் குறைகளில் பிறர் முன்னிலையில் குறிப்பிட்டு அவளை ஒரு கேலிப் பொருள் ஆக்குதல்.

03. மனைவியின் செயற்பாடுகள் தொடர்பில் விரும்பத்தகாதவாறு நடந்து கொள்ளல். உதாரணமாக மனைவியுடன் வெளியே செல்லும் போது அவள் ஒரு பாடலை முணுமுணுத்தாள் என வைத்துக் கொள்ளுங்கள். அவள் வாயை மூட வைக்கும் வகையில் கணவன் ஏதாவதுகூறுவார்.


04. மனைவியின் வார்த்தைகளை கண்டு கொள்வதில்லை. மனைவி எதைப் பற்றியாவது கதைக்க ஆரம்பித்தால் அது தொடர்பில் கவனம் செலுத்த தவறுவதோடு, குறித்த விடயத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தும் வகையிலான பதிலை கணவன் தெரிவித்தல்.

05. மனைவி ஆசை வார்த்தை பேசினாலும் அவள் மனது நோகும் படி அவளை புறக்கணிப்பது அல்லது ஏதாவது மாறுபட்ட கருத்தை தெரிவிப்பது.
06. மனைவி ஏதேனும் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்து அதனை செய்து தருமாறு கேட்கும் பட்சத்தில், அந்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது என மறுப்பு தெரிவித்தல்.

07. தன் மனைவியை பிறிதொருவன் நோக்குகிறான் என்றால் உண்மையான அன்பு கொண்ட எந்த கணவருக்கும் ஒரு வித பொறாமை கலந்த கோபம் ஏற்படும். ஆனால் மனைவியின் மீது ஈர்ப்பு அற்றவனுக்கோ, பிற ஆடவர்கள் தன்னை நோக்குகிறார்கள் என அவனுடைய மனைவியே கூறினாலும் கூட அது அவனை சிறிதளவேனும் பாதிக்காது. சொல்லப்போனால் அந்த விடயத்தை கண்டு கொள்ளமாட்டார்கள்.

08. மனைவியின் பாதுகாப்பு தொடர்பில் சிறிதளவேனும் அக்கறை அற்றவனாக கணவன் இருத்தல்.

09. மனைவியிடம் அன்பாகவோ அல்லது ஆதரவாகவோ பேசுவதை எப்போதும் புறக்கணித்தல். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!