பெண்களுக்கு கன்னங்களில் மட்டும் அடிக்கடி பரு உண்டாகக் காரணம் என்ன..?


ஆண், பெண் இருவருக்குமே பரு உண்டாவது இயற்கையான ஒன்று தான். ஆனால் குறிப்பாக, கன்னங்களில் மட்டும் அடிக்கடி பரு உண்டாகக் காரணம் என்ன தெரியுமா?

இது ஒன்றும் பயப்பட வேண்டிய பெரிய விஷயமெல்லாம் கிடையாது தான் என்றாலும் கூட அப்படியே விட்டுவிட முடியாதல்லவா?

பெண்களுக்கு பரு உண்டாவதற்கு பல காரணங்கள் உண்டு. பெண்களுடைய மாதவிலக்குக்கு முன்னர் உடல் வெப்பநிலை மாறுபாட்டால் பரு உண்டாகும்.

ஆனால் ஆண்களுக்கும் கூட பெரும்பாலும் கன்னங்களிலே பரு உண்டாகிறது.


டீன்-ஏஜைக் கடக்கும்போது, ஆண், பெண் ஆகிய இரு பாலருக்குமே உடல் வெப்பநிலையில் பல மாற்றங்கள் உண்டாகும்.

அப்போது சருமத் துளைகள் திறந்திருக்கும். இதனால் பரு உண்டாகும்.

பரு வருவதற்கு ஆண்களுக்கு மன அழுத்தமும் பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் கர்ப்பம் போன்ற உடல் ரீதியான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சருமத்தின் உள்ளிருந்து சருமத் துளைகள் வழியாக வெளியேறும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் சருமத்துளைகள் மற்றும் சுரப்பிகளில் உண்டாகும் அடைப்பு காரணமாக வெளியேற முடியாமல் பருக்களாக வெளிவருகின்றன.


பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்களின் காரணங்களால் தான் பருக்கள் மிக அதிகமாக உண்டாகின்றன.

ஜீரண மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை உருவாக்கினால் கன்னம் மற்றும் தாடைப் பகுதிகளில் பருக்கள் உண்டாகும்.

நமது உடலில் கன்னம் மற்றும் தாடைப்பகுதிகளில் தான் அதிக அளவிலான எண்ணெய் சுரந்து கொண்டே இருக்கிறது. அதனால் தான் அந்த 2 இடங்களும் பருக்களுக்குப் மிகப் பிடித்த இடங்களாக இருக்கின்றன.

இதற்கு ஒரே ஒரு தீர்வு தண்ணீர் நிறைய குடிப்பது தான். மேலும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!