முகப்பருவா..? வாரத்தில் இரு முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி பாருங்களேன்…!


விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கியுள்ள ஜொஜொபா எண்ணெயானது பல்வேறு தோல் பராமரிப்பு க்ரீம்களிலும் க்லென்சர்களிலும் அடங்கியுள்ள தொன்றாகும். இதனை உபயோகிப்பதால் பல்வேறு நன்மைகள் கிட்டுகின்றன. இவை எவை என இப்போது பார்ப்போம்.

01. அழற்சியை தடுக்கும்
02. பக்டீரியாவுக்கு எதிராக செயற்படும்
03. வைரஸ் தொற்றை தடுக்கும்
04. வயது முதிர்வது தாமதமடையும்
05. காயங்கள் ஆறும்
06. ஈரலிப்பை ஏற்படுத்தும்

முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் வாரம் ஒன்றிற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை ஜொஜொபா எண்ணெயை முகத்திற்கு பூசி வந்ததன் விளைவாக முகப்பருக்கள் குறைவடைந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஒருங்கே அழற்சிகள் ஏற்படுவது தடுக்கப்பட்டதும் நிரூபனமானது.


அதுசரி, இந்த ஜொஜொபா எண்ணெயை எவ்வாறு உபயோகிப்பது?
01. மேக்கப் ரிமூவர்
ஜொஜொபா எண்ணெயை சிறு பஞ்சு ஒன்றில் எடுத்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்து அப்படியே அழுத்தி எடுக்கவும். இதன் போது முகத்தில் உள்ள மேக்கப் இலகுவாக நீங்கும்.

02. க்ளென்சர்
இந்த எண்ணெயை சிறிதளவு எடுத்து முகத்தில் பூசி ஒன்று தொடக்கம் இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின்னர் பஞ்சு ஒன்றினால் துடைக்கவும்.

03. மாஸ்க்
பென்டோனைட்க்ளே மற்றும் ஜொஜொபா எண்ணெய் ஆகியவற்றை ஒரே அளவில் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு வாரத்திற்கு மூன்று தடைவ முகத்தில் பூசி சுமார் 10 – 15 நிமிடங்கள் வைத்திருந்து துடைத்து விடவும்.

இந்த எண்ணெயை உபயோகிப்பதால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
ஜொஜொபா எண்ணெயானது பாதுகாப்பானது எனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகித்த சிலருக்கு சில சமயங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் உபயோகிக்கும் போது அரிப்பு ஏற்படின் அதை பாவிப்பதை நிறுத்தவும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!