உங்க நகத்தை அழகாக வெச்சிக்க ஆசையா? இதோ சூப்பர் டிப்ஸ்…!


அழகான நீண்ட நகங்களை வளர்ப்பதிலும் அதற்கு வண்ணப் பூச்சுக்களைப் பூசுவதிலும் ஆர்வமும் ஆசையும் இருந்தாலும் நகங்களின் உடையும் தன்மையால் அவை பொய்யாகி போகின்றன.

நகங்கள் வயதடைவதும், நீண்டநேரம் குளித்தல், பாத்திரங்கள் கழுவுவதல் போன்ற செயல்களால் அதிக நேரம் நீருக்குள் நகங்கள் இருப்பதனால் அவை உடைந்து போகின்றன. அத்துடன் இரத்த சோகை, ஹைபோதையிரோடிசம் போன்ற நோய்கள் ஏற்படும் போது நகங்கள் உடைவதை நம்மால் பார்க்க முடியும்.

இதை தாண்டி தினமும் நாம் வேலைகளைச் செய்யும் போது நகம் உடையாமலும், அழகாக பேணுவதற்கும் பல யுக்திகளைக் கையாள வேண்டியுள்ளது.

நகங்கள் உடையாமல் பாதுகாப்பது எப்படி?
1. மரக்கறி எண்ணெய்.
தினமும் மரக்கறி எண்ணெய்யை நகத்தின் மீது பஞ்சினால் தடவி, நன்றாக மசாஜ் செய்வதனால் நகங்கள் வலுப் பெற்று, நீரில் அதிகம் படுவதனாலும் உடையாமல் தடுக்கும்.

2. சீயா பட்டர்
சீயா பட்டரின் மசாஜினால் நகங்களும், அதனைச் சுற்றியுள்ள புறத் தோல்களும் ஆரொக்கியமடைகிறது.

3. ஆளி விதை எண்ணெய்.
ஆளி விதை எண்ணெய்யில் உள்ள ஓமேகா-3 கொழுப்பமிலம் நகங்களுக்கு மிகவும் முக்கியமானது. தினமும் தூங்குவதற்கு முன்பு ஆளிவிதை எண்ணெய்யால நகங்களை மசாஜ் செய்து கையுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்ததும் சோப்பினால் கழுவுவதனால் நகங்கள் வலிமையடைகின்றன.


4. தேங்காய் எண்ணெய்.
நகத் தொற்றுக்களிற்கு சிறந்த தீர்வைத் தருவது தேங்காய் எண்ணெய். இதனால் மசாஜ் செய்யும் போது நகங்களிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன், ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகிறது.

5. எலுமிச்சப்பழச் சாறு.
வலிமையான நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்திற்கு எலுமிச்சப்பழச் சாற்றுடன் ஏதேனும் ஒரு எண்ணெய்யைச் சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது.

6. ஒலிவ் எண்ணெய்.
சூடான ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துவதனால் சிறந்த கட்டமைப்புள்ள நகங்கள் கிடைக்கின்றன.

7. கடல் உப்பு.
கடல் உப்பிள் உள்ள கனியுப்புக்கள் நகத்தைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளை மென்மையாக்கி, நகங்களின் அடிப்பகுதிகளை வலிமைப்படுத்தும்.

உப்பு கலந்த சூடான நீரில் ஏதேனும் ஒரு எண்ணெய்யைச் சேர்த்து 15 நிமிடங்கள் வரை விரல்களை ஊற வைப்பதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.


8. தேயிலை மர எண்ணெய்.
இதற்கு நகங்கலில் ஏற்படும் பங்கஸ் தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதோடு, நகங்களில் ஏற்படும் நிற மாற்றத்தையும் சரி செய்கிறது.

9. விட்டமின் ஈ எண்ணெய்.
விட்டமின் ஈ காப்ஸ்யூலை உடைத்து அதில் உள்ள எண்ணெய்யால் நகத்தினை மசாஜ் செய்வதனால் மென்மையான் உறுதியான நகத்தைப் பெற முடியும்.

10.ஆமணக்கு எண்ணெய்.
நகங்களை உறுதியாக்குவதுடன் தொற்றுக்களை நீக்கும் சிறப்பு ஆமணக்கு எண்ணெய்க்கு உள்ளது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!