அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிடும் ‘இமெயில் தமிழன்’ – இனவாத செற்களை கூறி தாக்குதல்..!!


தமிழகத்தின் சிவகாசியை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யத்துரை. தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு சென்ற அய்யாத்துரை, சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும், அங்கு தற்போது முன்னனி தொழில் முனைவராக உள்ளார்.

இ-மெயில் அனுப்பும் தொழில்நுட்பத்தை அய்யத்துரை கண்டுபிடித்தாலும், அதற்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்பட்டது. இன ரீதியான பாகுபாடே காரணம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு நடக்க உள்ள தேர்தலில் அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் அவர் போட்டியிடுவார் என முன்னர் கூறப்பட்ட நிலையில், அவர் தனித்து களமிறங்கியுள்ளார்.


ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய செனட் உறுப்பினருமான எலிசபெத் வாரென்-ஐ எதிர்த்து அவர் தேர்தலில் நிற்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டவுண் ஹால் பகுதியில் அவர் சிறிய ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த எலிசபெத் வாரென்னின் ஆதாரவாளர், சிவா அய்யத்துரையிடம் கடும் வாக்குவாதம் செய்தார். அவரை இனவாத சொற்கள் கூறி திட்டிய அந்த நபர், ஒலிபெருக்கியை கையால் தள்ளினார். இதனால், ஒலிபெருக்கி சிவா அய்யத்துரையின் முகத்தில் பலமாக தாக்கியது.

இதனை அடுத்து, அங்கிருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!