சினிமாவில் களை கட்டிய கலைஞரின் பஞ்ச் டயலாக்குகள் பத்து!


தமிழகத்தைப் பொறுத்தவரையில் சினிமா என்பது, ஒரு கலையாக மட்டுமில்லாமல், அதையும் தாண்டி மக்களின் ஒரு உணர்வாக பார்க்கப்பட்டு வருகிறது. திரையில் தோன்றும் நாயகர்களை நிஜத்திலும் நாயகர்களாக பார்க்கும் பழக்கம் இன்று வரை தமிழகத்தில் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கலைஞரின் பிரபலமான வசனங்கள் வருமாறு:

“பதவி என்பது முள்கிரீடம் போன்றது!”

“அனுபவம் ஒரு பள்ளிக்கூடம். ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை.”

“துணிவிருந்தால் துக்கமில்லை… துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை…”
!
“தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.”

“புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.”

“இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்!”

“தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.”

“சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்.”

“மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது”

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!