அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? அப்ப கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க..!


கறிவேப்பிலையை உணவில் கண்டால் போதும், சிறு குழந்தைகள் உணவு உண்பதற்கே விருப்பப்பட மாட்டார்கள். சிறு குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட அதை ஒருபுறம் ஒதுக்கி வைப்பதிலேயே காலத்தை செலவிடுகின்றனர். ஆனால் கறிவேப்பிலையை உண்பதனால் எத்தனை நன்மைகள் கிட்டுகின்றன என்பதைநீங்கள் அறிவீர்களா?

01. இரத்தசோகை குணப்படுத்தப்படுகின்றது
கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச்சத்தும் போலிக் அமிலமும் உள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக்அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.

02. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு
புதிய கறிவேப்பிலைச்சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக விளங்கும் அதிகப்படியான கொழுப்பு குறைக்கப்படுகின்றது.

03. சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கின்றது
கறிவேப்பிலையானது வலிகள், தலைச்சுற்று, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் தோய்ந்த மல நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகின்றது.

கறிவேப்பிலை இலைகளின் நன்மைகளும், செயற்திறனும் இரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கின்றன. இதன் காரணமாகத்தான் மேற்கூறிய நோய்களிலிருந்து விடுபட கறிவேப்பிலை உதவுகிறது.


04. தோலில் ஏற்படும் நோய்த் தொற்று குணப்படுத்தப்படுகின்றது
பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளான முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது.

கறிவேப்பிலை நோய்த் தொற்றினைக் தடுப்பதற்குக் காரணம் அதில் உள்ள விட்டமின்ஈ ஆகும்.

05. கல்லீரல் பாதுகாக்கப்படுகின்றது
கறிவேப்பிலை இலைகளில் உள்ள விட்டமின் – ஏ, விட்டமின் – சி மற்றும் கேம்ப்ரபல் எனும் சத்துக்கள் கல்லீரல் சுமூகமாகச் செயல்படுவதற்கு பெரிதும் உதவுகின்றன. இதனால் நாம் உண்ணும் கறிவேப்பிலை இலைகள் நம்முடையக் கல்லீரலைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

06. முடியை வலுவாக்குகிறது
ஆண்கள், பெண்கள் போன்ற இருபாலருக்கும் முடியின் அடர்த்தி குறைதல் மற்றும் இளநரை போன்றவற்றால் முடிஉதிர்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க கறிவேப்பிலை இலைகளை உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் சீர் செய்ய முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!