கருகருவென அடர்த்தியான கூந்தலுக்கு இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!!


தேங்காய் எண்ணெய் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவை உடலிற்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்கி ஆரோக்கியத்தை பேணி வருகின்றது. பெண்கள் தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு மட்டுமின்றி கூந்தலின் அழகிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி முடியை பாதுகாக்கும் முறைகள்.

(1) முடி உடைவதைத் தடுக்கின்றது.
தேங்காய் எண்ணெய் மற்றைய எண்ணெய்களை விட சிறப்பான குணங்களைக்
கொண்டுள்ளது.

இவை பாதிக்கப்பட்ட கூந்தலை இலகுவாக சரி செய்வதுடன் கூந்தல் உடைவதை தடுக்கின்றது.

தேங்காய் எண்ணெய்யை முடியின் எல்லாப் பகுதிகளிலும் நன்றாக தடவி வந்தால் முடி உதிர்வதைத் தடுக்கின்றது.

(2) முடி உதிர்வதைத் தடுக்கும்.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கி முடி உதிர்வதைத் தடுக்கின்றது.

பயன்படுத்தும் முறை
2 தேக்கரண்டி sagee எண்ணெய்யுடன் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை கலந்து சூடாக்கி சிறிது நேரம் ஆற விட வேண்டும். தினமும் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெய்யை தடவி வந்தால் சிறந்த பலனை பெறமுடியும்.


(3) நரை முடியை அகற்ற
தேங்காய் எண்ணெய் முடியின் வேர்ப் பகுதியில் இருந்து செய்ற்பட்டு நரைமுடி வருவதை தடுக்கின்றது .
தேங்காய் எண்ணெய்யை எலுமிச்ச பழத்துடன் சேர்த்து முடி மற்றும் தலையில் தேய்த்து வந்தால் நரை முடி வளர்வதை தடுக்கமுடியும்.

(4) மிருதுவான கூந்தலை பெறமுடியும்
தேங்காய் எண்ணெய்யில் உள்ள ஈரப்பதன் முடியின் உள்வரை சென்று ,அவை காய்ந்து விடாமல் தடுப்பதுடன் ,மென்மையான பட்டுப் போன்ற கூந்தலை பெறுவதற்கு உதவுகின்றது.
தலைகுளிப்பதற்கு 15 நிமிடங்களிற்கு முன்னர் தேங்காய் எண்ணெய்யை தடவி வந்தால் மென்மையான கூந்தலை பெற முடியும்.

(5) பொடுகை அகற்றவல்லது
மண்டையோடு உலர்ந்து அத்துடன் அழுக்குகள் சேர்வதனால் பொடுகுகள் உருவாகின்றன. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பொடுகை அகற்ற முடியும்.
தேங்காய் எண்ணெய், மற்றும் ஆமணக்கு எண்ணெய்யை சரி அளவாக எடுத்து தலையில் நன்றாக தேய்த்து 30 நிமிடங்களின் பின் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

(6) பேன் தொல்லை நீங்கும்
சிறுவர்கள் மட்டும் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது பேன் தொல்லையால் இவற்றை தேங்காய் எண்ணெய் மூலம் அகற்ற முடிகின்றது.
தேங்காய் எண்ணெய்யை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் பேன் தொல்லை நீங்கும்.

விலை அதிகமான அழகுப் பொருட்களை பயன்படுத்தி கூந்தலின் பொலிவை இழந்து விடாமல், பல நன்மைகள் நிறைந்த சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கூந்தலை பாதுகாக்க முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!