டிரம்புக்கு பரிசாக கிடைத்த கால்பந்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள்? – பரபரப்பை கிளப்பிய செனட்டர்..!


அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த 12-ம் தேதி பின்லாந்து நாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, புதின் டிரம்புக்கு கால்பந்து ஒன்றை பரிசளித்தார். பொதுவாக அமெரிக்க அதிபருக்கு வரும் எல்லா பரிசுப்பொருட்களும் சோதனைக்கு உள்படுத்தப்படுவது வழக்கம்.

தற்போதும் அதேபோல, அந்த கால்பந்தை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரகாம் டிரம்ப் – புதின் சந்திப்பை கடுமையாக விமர்சித்து ட்வீட்டியிருந்தார்.

“ஒருவேளை நான் அந்த கால்பந்தை பெற்றிருந்தால், அதில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் உள்ளதா என்பதை சோதனைக்கு உள்படுத்தி இருப்பேன். மேலும், அதனை ஒருபோதும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்து இருக்க மாட்டேன்” என கிரகாம் ட்வீட் செய்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!